பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்கள் ఈస్ట్ర 155 அதன் பலம் என்ன, என் பலம் என்ன! அப்பொழுது நான் குழந்தையில்லையா? “விட்டுட்றா, விட்டுட்றா!' என்று அம்மா கத்தினாள். ஆனால் அவள் அநுமதி கொடுக்கு முன்னரே அது என்னை மீறிவிட்டது. தாவிக் குதித்துக்கொண்டு தாயின் மடியில் மோதின வேகத்தில் கல்யாணிக்கு உடம்பெல்லாம் அதிர்ந்தது. மடிகூடச் சுளுக்கிக் கொண்டிருக்கும். கல்யாணி தன் கன்றுக்குட்டியை நக்கிக் கொடுத்தது. அம்மா அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஜலம் தளும்பிக் கன்னத்தில் வழிந்தோடியது. என்ன தோன்றிற்றோ, எதிரில் நின்றுகொண்டிருந்த என்னைத் தன்னிடம் இழுத்து அணைத்துக் கொண்டாள். நான் திமிறப் பார்த்தேன். முடியவில்லை. எண்ணங்கள் போகிறபடி எழுதிக்கொண்டே போனால் எல்லையே இல்லை. 盛 அம்மா என்னைக் கரும்பு வாங்கிவர அனுப்பினாள். சந்தைக்கும் வீட்டுக்கும் மூன்று மைலாவது இருக்கும். சாலை வழியெல்லாம் கரும்பைப் பற்றி யோசனை பண்ணிக்கொண்டே போனேன். இப்பொழுதெல்லாமே எனக்கு யோசனைகளெல்லாம் புதிது புதிதாய் வந்தன. அப்போதைவிட இப்போது எனக்கு வயது அதிகமில்லையா? 'கரும்புக்கு இத்தனை கணுக்கள் இருக்கின்றனவே, எல்லாமா தித்திக்கப் போகின்றன? நுனியையும் அடியையும் விட்டு இடைக் கணுக்களில்தான் சொல்லுகிறேன். இந்த இடைக் கணுக்களுள்கூட ஏதோ ஒரு கணுவுள், எங்கோ ஒர் இடத்தில், முழுக் கரும்பின் இறக்கிய இனிப்பெல்லாம் ஒளிந்து