பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்கள் శ• 贯57 அவள் என்னைப் பார்த்தாள். வெட்கம் பிடுங்கி, முகம் கவிழ்ந்தது. ஆண் பார்வையின் பணி பொறுக்காது, உடலொடுங்கி, இருகைகளாலும் மார்பைப் போர்த்திக் கொண்டாள். கறுப்பானாலும், குறுகுறுப்பான முகத்தில், ரத்தமும் வெட்கக் சிரிப்பும் குழம்பின. அந்நிலையில் அவள் விண்ணின்று சிறகின் மேலிறங்கி வந்த கந்தாவைப் போலிருந்தாள்! என் எண்ணங்கள் சுரக்கும் தேனில் நான் மிதந்துகொண்டு சென்றேன். சாலையோரமாய் மரத்தடியில் ஒருத்தி பனங்கிழங்கு, வேர்க்கடலை, கார்மாங்காய் கூறுகட்டி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கலில் அவள் புருஷன் உட்கார்ந்திருந்தான். மரத்தின் மேல் ஒரு கரும்புக் கட்டைச் சார்த்திவிட்டு, அதனின்று அவன் மேல் தழைந்த தழைக்கடியில், தாடியை ஒரு கையால் கோதிக் கொண்டு அவன் வீற்றிருந்தது ஈசவரன் மாதிரியிருந்ததுகவரப்பட்டு நான் நின்றேன். கருகருவென்று பட்டுப்போல் பளபளத்துக்கொண்டு, தாடி மார்புக்கும் தழைந்திருந்தது. தலைமயிரையும் வெட்ட வில்லை. கூந்தல் மேனோக்கிச் சீவப்பெற்று, பிடரியில் அழகாய்க் குஞ்சம் குஞ்சமாய்ச் சுருண்டு தொங்கிற்று. யோக வேஷ்டியாய்ப் போர்த்தியிருந்த மேல்துணி இடது புஜத்தையும் கையையும் மறைத்தது. கரும்புத் தழைக்கடியில் யோக புருஷன் மாதிரி. நான் அவன் தாடியை கவனிக்கிறேன் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. இடது கண்ணின் இமைகளை முறுக்கியடித்துப் புன்னகை புரிந்தான். “என்ன தம்பி, கரும்பு வாங்கலியா?” கரும்பை நோட்டம் பார்ப்பதில் பெரும் புலிபோல் நான் முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டு, "என்ன விலை?” என்றேன்.