பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 : லா. ச. ராமாமிருதம் “சரிதான், அப்புறம் வாங்கலாம். இப்படிக் குந்தேன். அவசரமா? எப்படி நம்ம தாடி? பலே ஜோரில்லே?” என்னையறியாமல் என் கன்னங்களை ஒருமுறை தடவிக்கொண்டேன். இப்போ இல்லாவிட்டாலும் போகிறது: வளருகிற சமயமாவது இவன்மாதிரி எனக்கு வளருமோ? அதற்குள் அவள் இடைமறித்து, "தாடி அவருதில்லே, ஆண்டவருது” என்றாள். "ஆரம்பிச்சுட்டியா? சம்மனில்லாமே ஆசராயிட்டியா?" அவள் கோபத்துடன் விரலையாட்டிக்கொண்டு, "இதோ பாரு, சொல்றேன். ரெண்டு வருசமா ஏமாத்திட்டு வரே. இந்தக் கிருத்திகிக்கி முடி குடுக்கலே பாத்துக்கோ! நான் அப்பறம் நொம்பக் கெட்டவளாயிருப்பேன். ஆமா, இப்பவே சொல்லிட்டேன்!” என்றாள். $ ஒஹ்ஹொஹ்ஹோ' என்று ஏளனமாகக் கொக்களித்துக் கொண்டே, கூறு கட்டியிருந்த மாங்காய்களில் ஒன்றை யெடுத்துத் தொடையில் துடைத்துவிட்டுக் கடிக்க ஆரம்பித் தான். “வாய்ஸ்தவம்தான்! மயிரென்னமோ ஆண்டவனுக்குத் தான் வளத்தேன். வளந்தப்பறம் மனசு வல்லியே!” ‘சாமிக்கு வெள்ளிப்பாடம் வேண்டிக்கிட்டேனே, அதுக்குத் துட்டு உன்னைக் கேட்டேனா? கேட்டாத்தான் வரப் போவுதா? முடிதானே குடுங்கறேன். இதுக்கு மேலே பாக்கறே, கீழே பாக்கறே, இல்லாத கதையெல்லாம் அளக்கறே!” “ஏதுக்கிந்த வேண்டுதல் எல்லாம்?” என்று கேட்டேன். "சொல்லேன் தம்பி கேக்குதே!” அவன் வாயிலிருந்து பேச்சு வரவில்லை. கரடி போன்ற புருவங்கள்தாம் உள்வலியில் நெரிந்தன.