பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$. கணுக்கள் & 161 தள்ளுவேனின்னு. ஆனா நான் ஒத்தருக்கு அடங்கறவன் ல்லே. சின்ன வயசுலேயே வீட்டுலே ஏதோ கோவம் பண்ணிக்கிட்டு ஊரைவிட்டு ஓடிப்பூட்டேன். நான் நொம்ப இடம் சுத்தியிருக்கிறேன் தம்பி. நொம்ப இடம்: ஒரு ஊரிலே ஒரு குளம் பார்த்தேன் பாரு-" “சரிதான், கதை பண்ணாமே கதைக்கு வா-” 'நாலு வருசம் களிச்சுத் திரும்பி வந்தேன். நானும் மாறிப்போயிட்டேன்னு வச்சுக்க நொம்ப விசயம் கத்துக் கிட்டிருந்தேன். ஆனா இவுளும் நொம்ப வளந்துட்டா பேச்சு வார்த்தையில்லையே தம்பி, அசப்புலே ஒத்தர் வளிலே ஒத்தர் குறுக்கே போனா, அப்போ நான் துளிர்மீசை மேலே கையைப் போட்டுக்கிட்டு நின்னா இவ அப்படியே கையைத் தொங்கப் போட்டுக்கிட்டு நிப்பா- உண்டாயில்லையா, நீயே கேளு-!” “நீ சுத்த வெக்கங்கெட்டவனாப் போயிட்டே' 'அம்பலமானப்பறம் வெக்கமென்ன, வெக்கம்? நானும் ஊர் வந்தப்பறம் இவளைக் கட்டறவரைக்கும் கட்டாய்த் தானிருக்கணும்னு ஒரு இடத்திலே அமர்ந்து வேலை பாத்துக் கிட்டிருந்தேன். வேலையிலே சோடையில்லே தம்பி நான்நம்மகிட்ட எல்லாரும் பிச்சை வாங்கனும்!” “சரிதான்! உன்மேலே பூப்போட்டு நீ இன்னும் ஒயலியா?” அவள் இடைமறித்தலை கவனிக்காமல் மேலே சொல்லிக்கொண்டு போனான்: “பொங்கல் நாள் வந்துரிச்சு கரும்பு நாள் வந்துரிச்சு ஊர்க் கில்லேடிங்கள்ளாம் பையிலே கையை விட்டுப் பணத்தை ஜலஜலத்துக்கிட்டு உலாத்தறானுங்க. மூலைக்கி மூலை பந்தயம் வெச்சுக் கரும்பு வெட்டியாவுது. “நானும் ஒருநாள் மூலையிலே வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னேன். அப்போ இவ கை இடுப்பிலே கூடையை வச்சுக்