பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 கணுக்கள் క్య j63 என்னைப் பார்த்தான். மூஞ்சி வெளுத்துப் போயிரிச்சு. நான் அதைக் கண்டுக்காமெ சொன்னேன்: 'மாமா உன் மவ எனக்குன்றது நொம்ப நாளைய விசயம். நீ சொல்லு தவறாமெ கட்டிக் கொடுத்துடு; பசியெடுக்குது, ஒருவேளைக் கஞ்சி ஊத்துன்னு உன் படியேறி வந்தாக் கேளு. மானம் போவாமே உன் மவளைக் காப்பாத்தறது என் பொறுப்பு. ஒரு கை போச்சுன்னு பாக்காதே மன்னனுக்கு இன்னும் ஒரு கை இருக்குது' “அவன் பதிலே பேசாமெ என் கைக் கட்டையே பாத்துக்கிட்டிருந்தான். நாளைக்குப் பஞ்சாயத்திலே பேசலா மின்னான். "பஞ்சாயித்தாவது!” எனக்குக் கெட்ட ரோஷம் வந்துட்டுது. யாருக்கு யாரு பஞ்சாயித்து? நம்ப மாட்டின் களுத்திலே தும்பில்லேன்னா, நடுவுலே எவனோ வந்து ஒட்டிக்கிட்டுப் போறது நியாயம்னு சொல்றதுதானே பஞ்சாயித்து! அப்போ நான் ஒண்ணும் பேசிக்கிடலே பேசாமே திரும்பிட்டேன். "மறுநாள் பஞ்சாயித்து இவுங்க வீட்டுத் திண்ணையிலே தான் கூடிச்சு. எல்லாரும், என் கை நல்லாயிருந்த நாளிலே, நான் முளிச்சுப் பாத்தேன்னா, கனாவுலேகூடப் பேத்தற பசங்க! என்மேலே பஞ்சாயித்துக் கூடியிருக்காங்க. ஹ-! 'நேரா வந்தேன். 'மாமா, உள்ளிருந்து உன் மவளைக் கூப்பிடு'ன்னேன். “இது என்னடா இல்லாத வளக்கம் பொல்லாத வளக்கம்-!'ன்னான். “டா வெல்லாம் ஒனக்கு இனிமே பொறக்கப்போற பேரப் பையனுக்கு வெச்சுக்க. ஒன் அவசரத்துலே சொன்ன பேச்சைத்தான் விட்டே மரியாதையையும் விட்டுடாதே நீ பஞ்சாயித்து வெச்சே- வெச்சபடி நடக்கட்டும். உன் மவளைக்