பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 : லா. ச. ராமாமிருதம் கூப்பிடு! அவ வாய்ப்படத் தெரிஞ்சுகிட்டுப் போயிடுறேன்:இப்படிச் சொல்லிக்கிட்டே கிர்ரென்று உள்ளே போனேன். இவ தண்ணிமுடாவைத் தேச்சுக்கிட்டிருந்தா, ஈரக் கையோடெ "கரகரன்னு இஸ்துகிட்டு வெளிலே வந்தேன். அவ அப்பன் மேலே தள்ளினேன். "ஐயோ, பாவின்னு கிளவன் லபலபன்னு அடிச்சு கிட்டான். ஏ கிளவா! நாலுபேர் நடுவுலே உன் பொண்ணைத் தொட்டுட்டேன். இனிமே இவளை எவன் கட்றான்னு பாத்திடறேன்’னு சவால் அடிச்சிட்டுக் கிளம்பினேன். “ஊரெல்லாம் பத்திக்கிச்சு, கன்னிப்பொண்ணைக் கையைப் புடிச்சு இஸ்துட்டான்னு. என்னை ஆளை வெச்சு அடிக்கிறதுக்குக்கூடக் கிளவன் ஏற்பாடு பண்ணிட்டான். எனக்குத் தெரிஞ்சுபோச்சு. நேரா போனேன். இதா பாரு, நான் செத்தாலும் சாவறேன்! ஆனா குண்ணாத்தம்மன் கோயிலுக்குப் போறதுக்கு முன்னாலே, உன் பேரையும் உன் பொண்ணு பேரையும் சந்திலே இளுத்து, சாக்கடையிலே பெரட்டீட்டுப் பூடுவேன். நான் கதை கட்டிவிட்டேன்னா, இந்த விசயத்துலே ஊர் என்னை நம்புமா, உன்னை நம்புமா, ரோசனை பண்ணு! நான் உசிரோடு இருந்தாலாவது உன் மவ களுத்துலே நூலாடும். இல்லா, நான் கட்டிட்டுப் போற கெட்ட பேர்தான் நிக்கும். உன் பொண்ணு கையைப் புடிச்சு இஸ்துட்டேன், கியாபகம் வச்சுக்கன்னேன். "கிளவன் இடிஞ்சுட்டான், புத்து மண்ணாட்டம்! ‘என் பொண்ணைக் கட்டு கட்டு'ன்னு காலுலே விளாத கொறையாக் கெஞ்சினான். அண்ணயப் பத்தாநாள் இவளை நான் கட்டினேன்.” அங்கு ஒரு அணிலைத் துரத்திக்கொண்டு ஒரு பூனை ஒடி வந்தது. அணில் மரத்தின்மீது ஏறிக்கொண்டு பூனையைப் பார்த்துச் சிரித்தது.