பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்கள் る。 167 நான் போனது முக முழிப்புக் காணவும், எங்களைப் பெற்ற வயிற்றில் நெருப்பைக் கொட்டவுந்தான். அம்பி அவளை அடித்ததாய்க்கூடக் கேள்வி. அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அவள் இலையில் துப்பினதாய்க் கேள்வி. போகிறான், பாவி! அவனிடமிருப்ப தால் எனக்கு என்னமோ மிச்சம் பிடிப்பதாய் அவள் எண்ணம் “எனக்கென்னடா குழந்தை? எங்கிருந்தாலும் ஒரு கவளமும் ஒரு சுத்துத் துணியுந்தானேடா? நீ சம்சாரி ஆயிட்டே நான் அசலிடமா போறேன்? அங்கேயும் என் பிள்ளைதான். கொஞ்சம் முன்கோபி. அவ்வளவுதானே?” என்பாள். அம்மாவால் எப்படியும் வேறெப்படியாயுமிருக்க முடியாது. அம்மாவுக்கு முன்னால், நாங்கள் தலையெடுக்கு முன்னாலேயே அப்பா போய்விட்டார். பாப்பா இப்பொழுது பீப்பாவாகி, கலியாணமானதும் மாமனார் வீட்டுடன் ஐக்கியமாகி வடகோடியில் எங்கோ போலீஸில் வேலை பார்த்து வந்தான். அங்கிருந்து வந்தவர் ஒருவர் சென்னார், பயல் கருடாழ்வான் மாதிரி கைநீட்டி வாங்கும் லஞ்சத்திற்கு அவனுக்கு இரு கைகளுமே போதவில்லையென்று. அவனிடமிருந்து கடிதமே கிடையாது. அப்புறம் நான்தானிருக்கிறேன். எல்லோரையும்விட நிறையப் படித்தேன். குடும்பத்திலேயே நான்தான் சூடிகை யென்று சுற்றியிருந்தவர்கள் சொன்னார்கள். நானும் எங்கெங்கோ சுற்றினேன். ஆனால் கடைசியில் இப்பொழுது கிராமத்தில் வாத்தியார் என்கிற பட்டத்துடன், அவரவர் வீட்டுக் குழந்தைகளை ஒரு கொட்டகையில் மடக்கி மேய்த்துக்கொண்டிருக்கிறேன்.