பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 & லா. ச. ராமாமிருதம் அப்புறம் வந்து வாய்பேசாது வெறுமென நிற்பான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட திகைப்பும் சோகமும் இப்பவே தேங்கிய அம்முகத்தைப் பார்த்து வயிறு ஒட்டிக் கொள்ளும். கட்டுக் கட்டாய்க் கார்டும் கவரும் அவனெதிரில் வைத்துக்கொண்டு, ஏதோ குற்றம் செய்கையில் கையும் பிடியுமாய் அகப்பட்டுக் கொண்டாற்போல் உள்ளம் குலுங்கும். "அம்மா கவர் வாங்கிக்கொண்டு வரச்சொன்னாளா? இந்தா, எடுத்துக்கோ.” கவரைக் கையில் பிடித்துக்கொண்டு குதித்து ஒடுவான். ஆனால் பூரீமதி பதறிப்பதறி எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை. கிராமத்தை வளைத்து ஒரு வாய்க்கால் ஓடியது. அதன் மூலஊற்று வீட்டிலிருந்து ஒன்றரை மைல். ஒருநாள் மாலை அந்தப் பக்கம் உலாவச் சென்றிருந்தேன். தோய்ப்பதற்குக் கொண்டு வந்திருந்த துணிகள் பந்தாய்ச் சுருட்டிப் பக்கத்திலிருக்க, ஜல ஒரத்தில் அவள் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அருகே அவள் பையன் கிளிஞ்சலோ, கூழாங்கற்களோ பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான். அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. என்னை மணல் திட்டு மறைத்தது. ஆனால் நான் அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் நான் கண்டதைக் கண்டதும், மறு அடி எடுக்கத் துக்கிய கால் கீழிறங்க மறந்து அந்தரத்தில் நின்றது. பூரீமதியின் எதிரில் ஜலமுகம் அகன்று விரிந்தது. அவள் நாட்டம் ஜலத்தின் நடுவில் ஏதோ ஒரு மீன் துள்ளிச் சுழித்த சுழியிலும், அச்சுழியில் ஜலத்தின் விதிர் விதிர்ப்பிலும்