பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 கணுக்கள் శ్మిళి f73 பதிந்திருந்தது. நெற்றிப்பொட்டு மயிர் சற்றுப் பரட்டையாய் மாலைக் காற்றில் அசைந்தது. முகத்தில் முந்நூறு மூவாயிரம் வருடங்கள். காலத்தின் வரையே கடந்து வயதேயிலாத வயோதிகம் கவிந்திருந்தது. இமைகள் கொட்டவில்லை. முகமே ஒழித்துப் பெருக்கி வைத்தாற்போல், ஒரு தனி வெறிச்சிட்டு, அதில் ஒரு எண்ணம், ஒரே எண்ணம், கொஞ்சம் கொஞ்ச மாய்ப் பயங்கரமாய் முறுக்கேறிக் கொண்டிருந்தது. எனக்கு நடுமுதுகு சில்லிட்டது. "அம்மா- அம்மா-' - அமிர்தாஞ்சன் பொம்மை மாதிரி அவள் முகம் அவன் பக்கம் திரும்பியது. ஆனால் அவன் அவளைப் பார்க்கவில்லை. தண்ணிரை உற்சாகத்துடன் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந் தான். கன்னக் கதுப்புக்களில் மாம்பழச் சிவப்பு மிளிர்ந்தது. தலையின் சுருட்டை மயிர் வெயிலின் ஜாலத்தில் தங்க மோதிரக் குவியலாய் மாறிற்று. “வவிக்கை!-” அவள் தோய்க்கக் கொண்டு வந்த ரவிக்கை மிதந்து சுழலில் இழுக்கப்பட்டு, அவள் எட்டும் தூரத்தையும் மீறி ஜலத்தின் நடுவுக்குப் போய்க்கொண்டிருந்தது. அமுக்கிய எஃகுச் சுருள் திடீரென்று திரும்பிக்கொண் டாற்போல், அவள் முகம் சட்டெனக் கலைந்தது; பூமியே புரண்டதுபோல் ஒரு பெரும் கேவல் அவளை அதிர்த்துக் கொண்டு அவளின்று கிளம்பியது. சுட்டிய முழங்கால்களின் மேல் விழுந்தது. “என்னம்மா! ஏம்மா அழவே? ஏம்மா-?” முன்னொரு நாள் நடுத்தெருவில் ஒரு ஆடு படுத்திருந்தது. அவசரமாய்ப் பந்தய வேகத்தில் வந்த ஒரு சைக்கிள்காரன் அதன்மேல் வண்டியை ஏற்றிவிட்டு, இறங்கிக்கூடப் பாராது