பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கணுக்கள் ఛిస్ట్ర 177 எத்தனை நாழியாகும்? அதுவும் சங்கராந்தியில், நம்பிக்கையின் நன்னாளாய் எல்லோருக்கும் விளங்கும் இன்னாள் இவளுக்கு மாத்திரம் பொய்த்துப் போக வேண்டுமா? இந்தக் கடிதத்தில் செருகியிருக்கும் கத்தியால் பூரீமதியை வெட்டிச் சாய்த்துத்தான் ஆகவேண்டுமா? இம்மாதிரி சமயங்களில்தான் மனிதன் கடவுளின் தன்மையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. முத்தொழிலும் செய்யும் பரத்தின் பொறுப்புக்குத் தனி லாயக்கு, கிராமப் போஸ்ட் மாஸ்டருக்குத்தான் இருக்கிறது. மறுகணம் என்னெதிரில் அக்கடிதம் நாலு சுக்கல்களாய்க் கிடந்தது. ஜன்னல் வெளியே நோக்கினேன். தெருவும் வீடுகளும் மறுபடியும் தம் நிலையில் நின்றுகொண்டிருந்தன. பொங்கலின் மனோகர வெயில், எதிர் வீட்டுத் திண்ணையில் வண்டிச் சக்கரம் சாய்ந்து நின்றுகொண்டிருந்தது. வாசலில் சாணியுருண்டையில் நேற்றுச் செருகி வைத்திருந்த ஒரு பறங்கிப்பூ கசங்கி வதங்கிக்கொண்டிருந்தது. நான் முன்பின் பார்த்திராத ஒரு அன்னிய ஸ்திரீ தெரு வழியே, என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டே குலுங்கி நடந்து சென்றாள். Q