பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#80 ఇు லா. ச. ராமாமிருதம் கனடாள உறசவருககு அலங்காரம செய்ததுபோல், பஞ்சக கச்சத்தில் பட்டை ஜரிகை அருவிபோல் நெளிந்து மறைந்தது. மார்பில் யோக வேஷ்டி மார்பில் கைகளை ஜானா அழுத்திக்கொண்டாள். "இரு இரு உசிரே. கொஞ்சம் பொறு; அதுக்குள் அவசரப் பட்டுடாதே-” இத்தனை கூட்டத்திலும், அதுவும் ஒருக்களித்த கதவின் பின்னாலிருக்கும் ஜானாவை ராமதுரை எப்படியோ பார்த்து விட்டான். மை தீட்டிய விழிகளிலிருந்து அவன் முறுவலின் ஒளியும் கலந்த அடையாளத்தின் சுடர் அவள் மேல் ஆடுகை யில், அவள் கண்கள் நிறைந்து நீந்த ஆரம்பித்துவிட்டன. "ஜானா, எப்படிக் கீழே வந்தாய்?" அப்போதுதான் தன்னருகில் நிற்கும் சந்துருவைக் கண்டாள். அவள் கன்னங்களில் கண்ணிர் அடக்க முடியாமல் கரகரவென வழிந்தது. சிரித்துக்கொண்டே ரேழிப் புறம் ஒரு கையைச் சுட்டிக்காட்டினாள். சுண்ணாம்பாய் வெளுத்திருந்த முகத்தில், கன்னங்களில் மாத்திரம் செந்திட்டுக்களிரண்டு இரு சக்கரங்களாய்ச் சுழன்றன. அவள் சுட்டிய வழியே சந்துரு நோக்கினான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “மேளத்தைக் கவனி!-” என்றாள். நாயனத்தின் வாசிப்பைவிட மேளத்தின் சப்தம்தான் தூக்கி நின்றது. யாரோ சின்னப்பயல், முழு உற்சாகத்துடன் வெளுத்து வாங்குகிறான். வேளையின் சந்தோஷமே அவன் மேளத்திலிருந்து குண்டு குண்டு மணிகளாய்த் தெறித்து, கலியாணக்கூடம் முழுவதும் சிதறி ஓடி உருண்டு, பந்துகள் போல் எகிறி எழும்பியது. மாவு கட்டிய விரல்கள் தோல்மேல் துடித்துத் துழாவி மறுபடியும் துடித்து அக்குண்டு குண்டுமணி களை எழுப்பின. மேளத்துள் சலங்கை குலுங்கி அதிர்ந்தது.