பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் *; 13] இந்தச் சப்தத்திற்குத்தான் சத்துரு இருபத்திரண்டு வருடங்களாய்க் காத்திருத்தானோ என்னவோ, ஜானா அறியாள். ஆனால் அவள் நிச்சயமாய்க் காத்திருந்தாள். புருஷாளுக்கு இதில் எல்லாம் ஆசை ஒடுமோ ஓடாதோ? ஆனால் சந்துருவுக்குக் கலியாணம் ஆன பிறகு கொட்டு மேளத்தின் சப்தம் இன்றுதான் வீட்டில் கேட்கிறது. இதற்கு முன்னால் ராமதுரையின் பூணுால்கூட ஏதோ பிரார்த்தனை யென்று எங்கோ, சுவாமி கூட இருக்க முடியாத அவ்வளவு மூலை கேrத்திரத்தில் நடந்தது. அங்கு அவள் போக எப்படிப்பட்ட கிழமாயிருந்தாலும் அதற்குக்கூட இத்தகைய சமயங்களில் தனக்கும் இம்மாதிரி நடந்ததெல்லாம் நினைவு வருமோல்லியோ! - ராமதுரையின் பக்கத்தில் நிற்கும் மணப்பெண்ணின் இடத்தில் தானும் இப்படியே தலை குனிந்து நின்றதை ஜானா நிறுத்திப் பார்த்துக்கொண்டாள். அவள் பக்கத்தில் அவள் கணவன் நின்றுகொண்டிருந்தான். ஜானாவின் அழகுக்கு அவள் கணவன் உறை போடக் காணான் என்று அப்போதே எல்லாரும் சொல்லிக் கொண்டார்கள். ஜானாவின் தாயாரிடம் வந்தவர் போனவர் எல்லாம் ஜாடையாகவும் வெளிப்படையாகவும் கலியாணத்துக்கு முன்னாலும் பின்னாலும் முறையிட்டுக்கொண்டார்கள். “ஏண்டி, இத்தனை நாள் காத்திருந்தேளே. இருந்திருந்து இந்த இடத்தான் உங்களுக்கு அகப்பட்டதா?” "எங்களுக்கு உன் பொண்ணை முன்னே பின்னே பார்க்காட்டாலும் பரவாயில்லை; தெரியாட்டாலும் பரவா