பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

兖 கொட்டு மேளம் so #33 கல்யாணம் நடந்து மூன்று வருஷங்கள் முழுக்க ஆகவில்லை. வெள்ளிக்கிழமையாய்ப் பார்த்து, காலன் அவள் கழுத்துக் கயிற்றைப் பிடுங்கிக்கொண்டு போய்விட்டான். நல்லவேளையாக, சந்துருவும் அம்மாவும் அந்தச் சமயத்தில் அவள் பக்கத்திலிருந்தார்கள். இப்பொழுது கூட நினைவு வருகிறது; தனக்கு வந்திருக்கும் கஷ்டத்தின் முழு மகத்துவமும் புரியாமலே அலறுகையில், அவள் தலையைச் சந்துரு தன் மடியில் வைத்துக்கொண்டு "ஜானா, நீ இனி எனக்குத் தம்பி. எனக்குத் தம்பியில்லை. எனக்கு நீ- உனக்கு நான்-” ஜானா தன் அண்ணனைக் கடைக் கண்ணால் கவனித்தாள். அவனும் யோசனையில் ஆழ்ந்துதான் நின்று கொண்டிருந்தான். ஒற்றை நாடி தேகம் அம்புபோல் நிமிர்ந்த உடலில் வெள்ளை ஜிப்பா நீண்டு தொங்கிற்று: முகத்தின் செந்தாழைச் சிவப்பு இன்னும் இம்மிகூடக் குறைய வில்லை. கரடி மயிரால் வளைத்த புருவங்கள் உள் வலியில் நெரிந்திருந்தன. ஆனால் அவன் தலைமயிரைப் பார்க்கையில் தான் ஜானாவுக்கு மனம் பெருந் தாங்கலாயிருந்தது. மயிர் தும்பையாய் நரைத்திருந்தது. அப்படி நரைக்க அவனுக்கு இன்னும் வயதாகவில்லை. சந்துரு முகத்தில் இன்னும் அதன் இயற்கை அழகு குன்றவில்லை. ஆனால் அதில் முந்நூறு வருடங்களின் மூப்பு தேங்கியிருந்தது. இந்த நரை புது நரையில்லை. இருபது வருடங்களுக்கு முன்னாலேயே கண்டுவிட்டது. சாயம் அடிப்பதுபோல் நெற்றிப் பொட்டில் கரைபோல் ஆரம்பித்துத் திடீரென்று தலை முழுவதும் படர்ந்துவிட்டது. சீவிவிட்டிருந்த மயிர் வெண்பட்டாய்ப் பளபளத்தது. என்னதான் அவளுக்கு அவன் மேலிருந்த பாசம் கண்ணை மறைத்தாலும், அவனுக்கு இப்படி நரைக்க இன்னும் வயதாகவில்லை.