பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& கொட்டு மேளம் * 191 கெளரி வாசற்படியில் நின்றுகொண்டிருந்தாள். அவள் முகமே ஒரு முகமூடி. "இல்லை, குழாயில் ரப்பரைக் கட்டிவிட்டேன்” என்றாள் அவளி. - “சரி சரி, ஜானா, தூங்கு அநாவசியமாய் எழுப்பி விட்டேன். எப்படியும் கனாத்தானே! எல்லாமே கனாத்தானே! கனாக்குள் கனா-' ஆனால் அவளுக்கு வெகுநேரம் வரையில் தூக்கம் வரவில்லை. அந்தக் கனவைப்பற்றி வெகுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அதைக் கனாவென்று சட்டென உதறித் தள்ள முடியவில்லை! கண்டதற்கெல்லாம் சந்துரு அவளை யோசனை கேட்பதில்லை. இது எதனுடைய அடையாளமோ மாதிரி இருந்தது. ஜானாவுக்கு மனப்பிராந்திதானோ என்னவோ, அன்றிலிருந்து தன்னை மன்னி ஏதோ தினுசாய்ப் பார்ப்பது போலும் கவனிப்பதுபோலும் தோன்றிற்று, கேஸ்-க்கு அலையும் போலீஸ்காரன் கவனிப்பதுபோல். மன்னி அப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன் சுய ரூபத்தைக் காண்பிக்க ஆரம்பித்தாற்போலவும் இருந்தது. திடீரென்று மணிக்கணக்கில் சுவரில் சாய்ந்தவண்ணம் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ இருப்பாள். “என்னடி கெளரி, இப்படி உட்கார்ந்திண்டு இருக்கே? எழுந்து காரியத்தைப் பாரேண்டி!" ஊஹாம். கெளரிக்குக் காது திடீரென்று செவிடாகிவிடும். வாயும் கிட்டிவிடும். ஒர் ஆணியையோ கல்லையோ எடுத்துக் கொண்டு சுவரில் கெளரி மனோஹரி என்று செதுக்கிக் கொண்டிருப்பாள். ஏனோ திடீரென்று முரண் செய்ய ஆரம்பித்துவிட்டாள். ஏதோ தனக்குள் ஒர் எண்ணத்தை