பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& கொட்டு மேளம் ఈస్ట్ర $93 துரோம். ஆனால் புடிச்சுக்கோ இஷ்டத்தோடு புடிச்சுக்கோ. உன் டோலக்கைக் கழற்றி வை. பெட்டியிலே என் தோடு இருக்கு தரேன், போட்டுக்கோ. உன் பரந்த முகத்துக்கு அது தான் நன்னாயிருக்கும். தொட்டதுக்கெல்லாம் உங்காத்தைப் பத்தி ஆரம்பிச்சுக்கிறையே, கொசுவம் வெச்சுப் புடவை கட்டிக் கொள்ளச் சொல்லிக் கொடுத்தாளா? அதுதான் பாக்கப் பதிய வீட்டுக்கு லக்ஷ்மிகளையாயிருக்கும்.” ஆனால் மருமகள் திருந்துவதாயில்லை. மாமியாருக்கு உள்ளுறக் கவலை பிடுங்கித் தின்ன ஆரம்பித்துவிட்டது. தனக்காகவும் தெரியவில்லை; சொன்னாலும் தெரிய வில்லையே! அல்லது தெரிந்துகொள்ளவே இஷ்டமில்லையா? நயம் பயம் எதற்குமே மசியாத பெண். இது பெண்ணா, அல்லது கொட்டு மேளம் கொட்டி வீட்டுக்கு வரவழைத்துக் கொண்ட விபத்தா? சந்துருவோ ஆபீஸுக்குப் போகிறான். அவன் இல்லாத சமயங்களில் இவள் அடிக்கும் லூட்டிகளில் எதெதை என்னென்று சொல்வது? நம்மைப்பற்றி அவன் ஏதாவது தப்பிதமாய் எண்ணிக்கொண்டுவிட்டால்? ஆனால் இவள் ஏதோ மாபாரதத்துக்குத் தயாராய்க்கொண்டு வருகிறாள் என்கிற திகில் அவளைப் பிடித்துக் கொண்டு விட்டது. தின்னும் சோறு உடம்பில் ஒட்டவில்லை. பக்கென்று உடல் இளைத்துவிட்டது. சந்துருவுக்கு என்னென்று புரியாவிட்டாலும் வீட்டில் ஏதோ சரியாயில்லை என்கிற வரைக்கும் புரிந்தது. ஆனால் யாரை என்னென்று கேட்க முடியும்? "ஏம்மா, ஒரு மாதிரியா எப்பவும் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கிறாய்? உடம்பு சரியில்லையா? வைத்தியனை வரவழைக்கட்டுமா?” "ஒண்ணுமில்லேடா: வயசாயிடுத்தோன்னோ, தள்ளல்லே-”