பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் శః 195 “கெளரி, ஏன் அப்படிப் பார்க்கிறாய்? புசுக்கெனச்சத்தம் போடாமெ ஏன் அப்படி வந்து நிற்கிறாய்? கெளரிக்கு விழி மாறவில்லை. அவள் தன் கணவனைக் கூடத் திரும்பிப் பார்க்கவில்லை. சந்தருவுக்குப் கோபம் வந்து விட்டது. “கெளரி, உன்னைத்தான் சொல்கிறேன். கெளரி கெளி' “என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள்.” “என்ன?” திடீரென உயர்ந்த தொனி கேட்டு, சுவரோரம் கண் ணயர்ந்த அம்மாவுக்கு விழிப்பு தூக்கிப் போட்டுக்கொண்டு வந்தது. “ஏண்டா அவளைக் கோவிச்சுக்கறே?” கெளரி முகத்திலோ குரலிலோ எவ்விதமான உணர்ச்சியும் இல்லை; குரூரமான ஒரு வெறிச்சுத்தான் இருந்தது. “என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடுங்கோ' அம்மா கெளரியிடம் ஓடிவந்தாள். "என்னடி கெளரி பேத்தறே?” கெளரி சந்துருவைப் பார்த்துக்கொண்டு பாடம் சொல்வதுபோல், “என்னை என் வீட்டில் கொண்டுபோய் விட்டுடுங்கோ. இந்த வீட்டில் உங்க தங்கைக்கும் எனக்கும் சேர்ந்து இடமில்லை.” அம்மாவுக்கு உடல் வெடவெடவென உதறிற்று. "ஐயோ சந்துரு! இதுமாதிரிதாண்டா ஏதோ என் வயத்தைக் கலக்கிண் டிருந்தது.” சந்துரு அம்மாவைப் பிடித்துக்கொண்டான். இல்லா விட்டால் அவள் கீழே விழுந்திருப்பாள்.