பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 & லா. ச. ராமாமிருதம் ஜானா சந்துருவின் வலது கையையே வசியமானவளாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அது மூடிமுடித் திறந்தது, எதையோ தேடுவதுபோல். “என்னை என் வீட்டிலே கொண்டுபோய் விட்டுடுங்கோ நீங்கள் விடாட்டா நானா வெளியேறிப் போய்விடுவேன்.” கொஞ்ச நாழிகை அம்மாவின் விசிவிசிப்பான அழுகை யைத் தவிர, கூடத்தில் எதுவும் கேட்கவில்லை. மன்னி எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் அப்போது அழகாயிருந்தாள். சந்துருவிடமிருந்து வார்த்தைகள் கிளம்பிய போது அவை அமைதியாகவும் சாதாரணமாயுந்தான் இருந்தன. “கெளரி, நாளைக் காலை உன் அப்பாவுக்குச் சொல்லியனுப்புகிறேன். நீ போய்விடு!” “டேய், அவள் தெரியாமல் சொல்றாடா!' “பூட்டுச் சாவி எங்கே வைத்திருக்கிறாய்? கெளரி பயப் படாதே, நீ சொன்ன வார்த்தைகளுக்கு உன்னை அடித்து விடுவேனோ என்று. உன்னை மடிக்கொம்பால்கூடத் தொடப் போவதில்லை- அம்மா, பூட்டு சாவி எங்கே வைத்திருக்கிறாய்? இரவு வரை இவளை இவளிடமிருந்து காப்பாற்றி இவளைப் பெற்றவரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இவளுக்கில்லா விட்டாலும் நம் மானத்தை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.” சந்துரு பூட்டையும் சாவியையும் எடுத்துக்கொண்டு வாசற் பக்கம் சென்றான். தாழ்ப்பாளை இழுத்துப்போட்டு, சங்கிலி புரளுகையில் ஜானாவுக்குத் தன் மார் மேலேயே கல் இறங்குவது போல் இருந்தது. துர்ச்சொப்பனம் போன்ற அந்த இரவை என்றும் மறக்க முடியாது. சொக்கட்டானில் காயை நகர்த்தினாற்போல் அவரவர் தம்தம் இடத்தில் நின்றபடி கழிந்த அந்த இரவை