பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் & 197 மறக்க முடியாது. இப்பொழுதுகூட அது ஏதோ திகிலை உண்டாக்குகிறது. அவளைக் கூட்டிக்கொண்டு போக வந்தவர்களும் அவளுக்குப் புத்தி சொல்லவில்லை. ஏன், என்ன என்று கேட்கும் மரியாதைகூட இல்லை. அவளுக்கு மூன்று தலைமுறைக்குச் சாதம் போட எங்கள் வீட்டில் இருக்கிறது என்று சவால் கூறிவிட்டு அவள் தகப்பன் அவளைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய்விட்டான். வீட்டுக்கு வந்து குடித்தனம் பண்ணி இன்னும் பத்து மாதங்கள் முழுக்க ஆகவில்லை. கெளரி போய்விட்டாள். அப்படி அவள் போகும்போது மூன்று மாதங்களாய் ஸ்நானம் பண்ணவில்லை. அவள் வீட்டை விட்டு வெளியேறின. பத்து நாட்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அப்புறம் ஈசல் கூட்டம் மாதிரி வதந்திகள் கிளம்ப ஆரம்பித்தன. அவைகளையும் ஓரளவு எதிர் பார்க்க வேண்டியதுதான். இதுவரை எந்த நாத்தனாரோ, மாமி யாரோ நல்ல பேர் வாங்கியிருக்கிறார்கள்? ஆனால் மன்னிக்கு என்மேல் இவ்வளவு rாத்திரம் விழும்படி நான் என்ன செய்தேன் என்று ஜானா யோசிக்கையில் அவளுக்குச் சிரிப்புக் கூட வந்தது. ஏனெனில் அவள் அதிகம் வீட்டு விவகாரங் களைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. அவள் பாடங் களுக்கும், பள்ளிக்கூட அலுவல்களுக்குமே பொழுது சரியா யிருந்தது. நாளாக ஆகத் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் தன்னைக் கண்டதும் ஏதோ தம்முள் ரகசியம் பேசிக்கொள் வதும், தோளை இடித்துக்கொள்வதும், தான் அவர்களைப் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டபோதெல்லாம் தன்னைச் சுட்டிக் காண்பிப்பதும் ஜானாவுக்குப் புரியவில்லை, பிடிக்கவில்லை. அப்புறம் ஒருநாள் அவளை பள்ளிக்கூடத் தலைமை உபாத்தியாயினி கூப்பிட்டு அனுப்பினாள்.