பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 & லா. ச. ராமாமிருதம் “என்ன ஜானா? இப்படி உட்கார். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். உன் வீட்டு விவகாரத்தில் புகுகிறேன் என்று நினைக்காதே. ஆனால்- உன் மன்னி வீட்டில் இல்லையா?” ஜானாவுக்கு ஆச்சரியம் கோபம் எல்லாம் ஒருங்கே வந்துவிட்டன. "இது வீட்டு விவகாரம். இதற்கும் பள்ளிக்கூடத்துக்கும் என்ன சம்பந்தமென்று எனக்குத் தெரியவில்லை” என்றாள். பிரின்ஸிபால் கீழ்நோக்கிய வண்ணம், மேஜை மேல் பென்ஸிலை நிறுத்தி வைக்க முயன்றுகொண்டே, "கோபிக்காதே ஜானு, நீ இம்மாதிரி சொல்வாயென்று எனக்குத் தெரியும். இன்று காலை உன் மன்னியின் தாயார் இங்கு வந்திருந்தாள். உன்னைப் பற்றி என்ன என்னவோ கன்னாபின்னா என்று பேசினாள்” என்றாள். “என்னைப் பற்றியா? என்ன சொன்னாள்?” ஜானா வுக்குக் கண் நரம்புகள் குறுகுறுக்க ஆரம்பித்தன. வாத்தியாரம்மா பென்ஸிலை நிறுத்தி வைப்பதிலேயே “என்ன சொன்னாள் என்று நான் வாய்விட்டுச் சொல்ல வேண்டுமா? அவள் கத்தின. கத்தலும் ஆடின சதிரும் எனக்குப் பிடிக்கவில்லை. வெளியே போய்விடு என்றுகூடச் சொல்லி விட்டேன்.” "ஓ p. “ஆம்; அவள் வாயிலிருந்து கிளம்பிய ஆபாசத்தைக் கேட்டதும் உண்மையில் நம் வர்க்கத்தைப் பற்றியே நினைக்கக் கூட வெட்கமாய்ப் போய்விட்டது. ஆண்களை நாம் ஆயிரம் அவதூறு சொல்கிறோம்; சம உரிமை வேணுமென்கிறோம். ஆனால் ஆண்களுக்கு இருக்கும் பெருந்தன்மை நமக்கில்லை. என்றாள் ஜானா, சற்று ஏளனமாய்.