பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் & işş ஆண்கள் தவறுகள் செய்யலாம்; ஆனால் அவர்களுக்கு மனத்தில் அழுக்குக் கிடையாது. ஆபாசம் கிடையாது. ஆனால் நமக்கு அதுதான் இருக்கிறது. நமக்குப் பெருந்தன்மை கிடையாது. நம்மைப்பற்றியே நாம் தூற்றிக்கொள்ளும் ஆபாசங்களே அதற்குச் சாகூவி-” "இந்தச் சக்கர வட்டமெல்லாம் எதற்கு? உங்களுக்கு ஏதாவது சொல்லவேண்டுமென்றிருந்தால் என் அண்ணனிடம் சொல்லுங்கள். உண்மையில் இதற்கும் எனக்கும் சம்பந்த மில்லை.” 'வாஸ்தவந்தான். நல்லவேளையாய் உன் அண்ணனை நேரிடையாகத் தெரியாவிட்டாலும் அவரைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உன் அண்ணனிடம் சொல்லக் கூடியதுமில்லை.”- திடீரென்று அலுப்புடன் பென்ஸிலை மளுக்கென்று இரண்டு துண்டுகளாய் முறித்து எறிந்துவிட்டு, எழுந்துபோய் முதுகை அவள் பக்கம் திருப்பிக் கொண்டு நின்றாள். “மொத்தத்தில் எனக்கு ஒன்று படுகிறது. நான் நமக்காக நடத்தும் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே வரவர எனக்கு நம்பிக்கை குறைகிறது. ஏனெனில் இளவயதிலேயே நம் கதிக்கானவர்கள் மரியாதையாய் அந்தக் காலத்திய வழக்கப் பிரகாரம் உடன்கட்டை ஏறிவிடுவதே நலம். உயிர் போனாலும் மானமாவது பிழைக்கும். நான் சொல்லுகிறது புரிகிறதா? அல்லது இதைவிடப் புரியப் பண்ண வேண்டுமா?” “ளலிஸ்டர்- சந்துரு என் அண்ணா!” என்று ஜானா அலறினாள். எலிஸ்டர் அவளிடம் வந்து அவள் தோள்மேல் கை வைத்தாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. “எனக்கு அது தெரியும் ஜானா! உன்னை ஜாக்கிரதைப் படுத்தவே உன்னைக் கூப்பிட்டேன். இது பொல்லாத உலகம்.