பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் ; 20: தெரிந்துகொண்டு விட்டேன். எனக்கு வாய்த்தவள் பதர். அதுவும் அது முளைத்த மண்ணிற்குத் தகுந்தாற்போல்தான் பயிராயிருக்கிறது. இது நமக்கு நேர்ந்திருக்கவேண்டாம். ஆனால் நேர்ந்தது நேர்ந்துவிட்டபின், நேர்ந்ததை அநுபவித்துத்தான் தீரவேண்டும். இது எங்கு கொண்டுபோய் விடுமோ நான் அறியேன். எங்கு வேண்டுமானாலும் கொண்டு விடட்டும். ஒன்று மாத்திரம் உனக்கு ஞாபகப்படுத்துகிறேன். நம் வீட்டு மாப்பிள்ளை இறந்த பொழுது, உன் தலையை என் மடியில் வைத்துக்கொண்டு, ஜானா நீ இனி என் தம்பி. எனக்கு நீ உனக்கு நான்’ என்று சொன்னேனே..! உனக்கு நினைவு இருக்கிறதா? எனக்கு இப்பவும் எப்பவும் அப்படித்தான்.” ஜானாவுக்கு அழுகை புதிதாக மடை திறந்துகொண்டு வந்தது. - 冰 永 岑 ஜானாவுக்கு ஏதோ தனக்குள் லொட்டென்று ஒட்டை விழுந்துவிட்ட மாதிரி ஒர் உணர்ச்சி- இடி விழுந்து பள்ளம் ஆகிற மாதிரி. தன் வாழ்க்கைதான் வீணாயிற்று என்றால், அண்ணா வாழ்க்கையும் இப்படிப் போக வேண்டுமா? அம்மாவுக்கு இந்த வயசில் அநுபவிக்க வேண்டியது இன்னும் எவ்வளவு பாக்கி? குடும்ப மானம் ஏன் திடீரென்று அவிழ்ந்த பொட்டலம் மாதிரி ஆகிவிட்டது? “ஏண்டி ஜானா, உன் மன்னியை நீதான் வாழவிடவில்லை யாமே! கிழவிகூட நல்லவளாம். நீதான் தடங்கலா நிக்கறையாம்!” “என் காதுலே எதுவும் போடாதேங்கோ, மாமி!” "உன் மன்னியை இன்னிக்கு நான் சினிமாவிலே பாத்தேன். அடையாளமே தெரியல்லே. எங்கிருந்தடி திடீர்னு கோண வகிடு வந்தது? அவள் ரிப்பன் என்ன, உள்பாவாடை