பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 & லா. ச. ராமாமிருதம் தெரிய ஜார்ஜெட் ஸாரி, மாரிலே ப்ரூச்சு கையிலே கடிகாரம்:- இப்போ என்ன அவளுக்கு மாசமா? கூட அவள் அம்மாவும் வந்திருந்தா. ஏதேதோ பேசினோம். புகுந்த இடத்திலேதான் என் பொண்ணுக்குச் சுகமில்லே. வயறும் பிள்ளையுமாயிருக்கா. இருக்காளோ, போயிடறாளோ- அவள் ஆசைப்பட்டபடி இருக்கட்டும்னு இருக்கேன் என்கிறாள்:” “என்னடி கெளரி செளக்கியமா? எப்போ புக்காம் போப் போறே? வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் இருக்கேன்னு ஜாடையாக் கேட்டேன். அது ஸ்டைலா, பின்னல் ரிப்பனைச் சீண்டிண்டு, அசட்டுச் சிரிப்பு சிரிச்சுண்டு, கம்முனு. இருக்கு எனக்கு அப்பவே தெரியும், நம்ம மாதிரி குடும்பத் துக்கும் அவா ஸ்டைலுக்கும் சரிப்படாதுன்னு. என்னை ஒரு வார்த்தை கலந்திருந்தால் இந்தச் சம்பந்தத்தை அப்பவே தடுத்திருப்பேன்." “போங்கோ மாமி, தயவுசெய்து போங்கோ!” ஜானா இரு காதுகளையும் பொத்திக்கொண்டாள். “என்னவோ அம்மா, விஷக்கடி வேளை, உங்களையும் எனக்குத் தெரியும் அவாளும் கெட்டவாளில்லை. இந்தக் காலத்துலே வீட்டுக்கு வரதே குதிரைகளாய்த்தான் வரதுகள். அதுகளை விட்டுத்தான் பிடிக்கணும்.” "சரி, போறும் மாமி’ ஆனால் இந்த மாமி சொல்ல வந்ததை முடித்துக் கொண்டுதான் விடுவாள். "இப்பவும் ஒண்னும் குடி முழுகிப் போயிடல்லே. நீ எங்கேயாவது ஹாஸ்டல்லே போய்ச் சேர்ந்துடேன்! உனக்கு ஏன் இந்தப் பொல்லாப்பு:” - “யார் இவள்”