பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் 哆 203 பின்னால் குரல் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு உயரமாய் சந்துரு நின்றுகொண்டிருந்தான். “என்னடாப்பா, நான்தான்-” "நீங்கள் யாராயிருந்தாலும் சரி, வாசற்படி விட்டுக் கீழிறங்குங்கள்.” - “ஆ-ங்-ங்-ங்?” "நான் இழுத்துக்கொண்டு போய் உங்களை வெளியில் விடவா, மரியாதையாய் நீங்களே போய்விடுகிறீர்களா? இனி இந்த வாசற்படியில் உங்களை நான் காணக்கூடாது!” கதவைத் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு சந்துரு கூடத்துக்கு வநதான. “உங்கள் ரெண்டுபேருக்கும் ஒன்று சொல்கிறேன், ஊர் வம்பைக் கேட்டுக்கொண்டிருந்தால் இன்னும் இந்த வீடு உருப்படாமல் போய்விடும்.” “நாங்களாகப் போய் அழைக்கிறோமா? நம்மைத் தேடிண்டுன்னாடா வரது!” - "இது நம் கஷ்டத்தைத் தீர்த்து வைக்கப் போவதில்லை. இதனால் நம் பலத்தைக் குறைக்கத்தான் முடியும். ஆகையால் அது தெருவோடு போனாலும் சரி, வாசற்படி ஏறி வந்தாலும் சரி, அதை சட்டை செய்யாமல் நம் காரியத்தை கவனிக்க வேண்டியதுதான்.” “நம் காரியந்தான் என்ன?” அவன் முழுப்பார்வையும் அவர்கள் இருவரையும் அணைத்தது. "இப்போதைக்குக் காத்திருப்பதுதான்.” “எதுக்கு?”