பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 & லா. ச. ராமாமிருதம் “அது புரியும் வரையில்.” அம்மாவுக்கு அலுப்பு வந்துவிட்டது. "இந்தப் புதிரெல்லாம் யாருக்குப் புரியறது? இந்த மாதிரி இன்னும் எத்தனை நாள்? நம்ம சொத்து அது போய்க் கரகரன்னு இழுத்துண்டு வந்து இந்தக் கன்னத்திலே நாலு, அந்தக் கன்னத்திலே நாலு கொடுத்தால் நல்ல மருந்தாகிவிடும். சந்துரு சிரிக்க முயன்றான். “அது நடக்காத காரியம் அம்மா. மானமுள்ளவளாயிருந்தால் இதுவரைக்குமே வைத்துக் கொள்ள மாட்டாளே! நான் என்னவோ என்று நினைத்தேன். நம்பினேன். மோசம் போனேன்.” * “இல்லை, காலுக்கு உதவாத செருப்பைக் கழட்டி எறிஞ்சுடு, நமக்குச் செளகரியமா இன்னொண்ணு பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.” “அதுவும் என் காரியம் அல்ல.” “பின் என்னதான் உன் காரியம்? இந்தக் குடும்பம், நேத்திக்கு வீட்டுக்கு வந்தவள் கூத்தில் குட்டிச்சுவராய்ப் போவதைப் பார்த்துக்கொண்டிருப்பதுதான் உன் காரியமா?” சந்துரு பதில் பேசவில்லை. அவன் விழித்த விழியிலேயே அம்மாவுக்கு அழுகை அடங்கிப் போயிற்று. சந்துரு தன் அறைக்குச் சென்றுவிட்டான். காத்திருப்பதென்றால் என்ன? சந்துரு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்த தலையுடன், ஜன்னலண்டை மணிக் கணக்கில் அசைவற்று நின்றிருப்பான். மலைத்தொடர்கள் அசையாமல் நின்றுகொண்டிருக் கின்றன. அவை காத்துக்கொண்டிருக்கின்றனவா? காத்துக் கொண்டிருக்கின்றன என்றால் எதற்காகக் காத்துக்கொண் டிருக்கின்றன? ஐயனார் கோவிலிலோ கிராம தேவதைக் கோவில்களிலோ, மதில்மேல் பிரம்மாண்டமான சிலைகள்