பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் & 205 கையொடிந்தும் காலொடிந்தும், தலையில் பட்சிகள் எச்ச மிட்டும் தம் தீனிகளைக் கிழித்துச் சதையும் ரத்தமும் சிந்த அவைகள் மேல்வைத்துத் தின்றும், வெயிலோ மழையோ, எதுவும் தெரிந்தோ தெரியாமலோ பொருட்படுத்தாமல், வெண்டயம் போன்ற விழிகளை எந்நேரமும் விழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கின்றன; அவை காத்துக் கொண்டிருக்கின்றனவா? அவை காத்துக் கொண்டிருந்தால் எதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றன? அம்மாதிரி மெளன அரணில் சந்துரு வீற்றிருக்கையில் அவனருகே போகக்கூட அச்சமாயிருக்கும். ஆனால் அதையும் பிளக்கும் ஏதோ ஒன்று அவனைச் சில சமயங்களில் சூழ்கையில் காதைப் பொத்திக்கொண்டு தலையை உதறிக்கொள்வான். அது என்ன, அவன் தன் கனவில் கேட்ட கானமா? தனக்குள்தானே பற்றிக்கொண்டு எரிவதன் துடிப்பா? ஜானா நாளுக்கு நாள் இளைத்துத் தேய்ந்தாள். நல்ல எண்ணத்துடனோ வேடிக்கைக்கோ நாலுபேர் பேசும் பேச்சும் சொல்லும் புத்திகளும் பொறுக்கக் கூடியனவாயில்லை. “காயும் பூவுமாய்க் காய்ச்சுத் தழைக்கிற நாளிலே, உன் அண்ணனும், மன்னியும் ஏண்டி இப்படி இருக்கணும்?” “எனக்கென்ன மாமி தெரியும்? அவளேதானே போனாள்:” “அவள் போனதுக்கு உன்னைக் காரணமா ஏன் சொல்லிண்டு திரியனும்? இந்தக் காலத்திலே அண்ணனாவது தங்கையாவது! அவாவா வழியை விட்டு அவாவா ஒதுங்கி விடறதுதான் நல்லது.” ஜானாவுக்கு எதிலும் புத்தி செல்லவில்லை. பரீட்சைக்குப் பணம் கட்டினதுதான் மிச்சம்; பரீட்சைக்கு உட்கார முடிய