பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 & லா. ச. ராமாமிருதம் வில்லை. அவள் வளைய வருவதற்கும் அவளுக்குமே சம்பந்தம் இல்லாமல் போய்விட்டது. சப்தங்கள் இல்லாத இடத்தில் சப்தங்கள் கேட்டன; சப்தங்கள் இருக்கும் இடத்தில் காது செவிடாகிவிட்டது. வைத்தியனிடம் காண்பித்தால், "ஒன்றும் புரிய வில்லையே! உறுப்புக்கள் கோளாறில்லாமல் ஒழுங்காய்த் தானே வேலை செய்கின்றன: ஒன்றும் புரியவில்லையே!” என்று திகைக்கிறான். ஆனால் இளைத்து வந்தாள். "ஜானா இன்னிக்கு உன் மன்னியோட அம்மாவைப் பாத்தேன். ஈரத்துணியோடெ அனுமார் கோவிலைச் சுத்திண்டிருந்தாள். நான் ஏதேதோ கேள்விப்படறேனே! ரகசியமாப் பூஜைகள் எல்லாம் நடக்கிறதாம். என்னமோ சஞ்சீவிமலை கொண்டுவர அனுமார் படத்திலே வாலிலே நாளுக்கு ஒரு பொட்டா ஒரு மண்டலம் வெச்சு முடிச்சு யார் வேண்டாதவாளோ அவா மேலே விடறதாமே! எனக் கென்னமோ பயமாயிருக்குடியம்மா. உன் அண்ணாவும் மன்னியும் எக்கேடு கெட்டுப்போறான்னு நீ ஒதுங்கிடறதுதான் நல்லது.” - “நான் என்ன மாமி பண்ணினேன்! நான் அவளைப் போ என்றேனா? வருபவளை வேண்டாமென்கிறேனா?” “அதென்னவோ அம்மா, நான் சொல்றத்தைச் சொல்லிப் பிட்டேன்.” திக்திக்திக்திக்திக்திக்திக்திக்ஒருநாளிரவு வீலென்று அலறிப் புடைத்துக்கொண் “என்னடி! என்னடி ஜானா?” கூந்தல் கசகசக்க அவள் தேகம் முழுவதும் வியர்வை கொப்புளித்திருந்தது. ஓடிவந்தாற்போல் மூச்சு இரைத்தது.