பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 & லா. ச. ராமாமிருதம் ‘அண்ணா, அண்ணா, என்னை மன்னிச்சுடு. நான் ஏன் இப்படி விஷத்தைக் கக்கறேன்னு எனக்கே தெரியல்லே.” "பரவாயில்லை; என்னை என்ன வேணும்னாலும் திட்டிக்கொள். ஆனால் உடம்பை மாத்திரம் எப்படியாவது சரிபண்ணிக் கொண்டுவிடு” "இல்லே அண்ணா எனக்கு ரொம்ப அலுப்பாயிருக்கு நான் பிழைப்பேன்னு எனக்குத் தோணல்லே. எனக்குச் சாகப் போறேனேன்னு பயமாயில்லை. ஆனால் அம்மாவுக்கு இந்த வயசுலே இந்தக் கஷ்டத்தையும் வெச்சுட்டுக் போறேனே. இந்த துக்கத்தைத் தவிர எனக்குச் சாகப்போறோம் என்கிற பயமில்லே.” "உயிருடன் இருப்பது எவ்வளவு முக்கியமில்லையோ, அதேமாதிரி சில சமயங்களில் சாவது ஒன்றும் முக்கிய மில்லை.”- கரடி மயிரால் வளைத்த புருவங்களினடியில், கனிந்த தணலாய், அனல் கக்கும் கண்கள் அவளைத் துருவின. அவனுடைய தாழ்ந்த குரலின் தீர்க்கம் அவளை மெதுவாய் அழுத்தியது. ‘சாவதையும் வாழ்வதையும்விட எதற்காகச் சாகிறோம். எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை வீம்பாகிவிடும்பொழுது அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை. ஆகையால் நீ இப்பொழுது செத்தால் உன் சாவுக்கு நான் அழப்போவதில்லை. ஆனால் அது உன் தோல்வி என்றுதான் என்னுடைய பெரும் அழுகையாயிருக்கப் போகிறது. இன்று நீ செத்தால் ஊருக்காகச் சாகப் போகிறாய். உனக்காகவே நீ சாகவில்லை. ஊர்ச்சொல் தாங்காமல் நீ சாகப் போகிறாய். இந்த ஊருக்கு என்ன தெரியும்? உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரியுமா? எச்சில்பட்ட நாக்கு ஒன்றுதான் அதற்கு உண்டு. நீ உயிருடனிருந்தாலும் அதற்கு ஒரு வேடிக்கைதான். நீ இறந்தாலும் அதற்கு இன்னொரு