பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 & லா. ச. ராமாயிருதம் "அவ கிடக்காடி, அதைவிட்டுத் தள்ளு! சொல்லறவா என்னத்தைச் சொன்னாலும் தனக்காத் தெரியணும். ஏன் இப்படித் தன் தலைலே தானே மண்ணைப் போட்டுக்கறது: என்னதான் மலைலே விளையட்டுமே, உரலிலே மசிஞ்சுதானே ஆகணும்? அப்படி என்னடி இவ ஜமீந்தார் வீட்டுப் பொண்ணு தட்டுக் கெட்டுப் போறது! இவள் அப்பனை எனக்குத் தெரியாதா என்ன? விரலுக்கு மிஞ்சி வீங்கிப்பிட்டு எத்தனை பேருக்கு எவ்வளவு எவ்வளவு தொகைக்குப் பத்தரம் எழுதிக் கொடுத்திருக்கான், தெரியுமா? மானத்தை விட்டவாள்ளாம் பெரிய மனுஷான்னா, அவன் ரொம்ப ரொம்பப் பெரிய மனுஷன் போ! அதுக்குச் சந்தேகமேயில்லை. மக்களுக்குச் சத்துரு மாதாபிதா' மறுபடியும் நாட்கள் பழைய நாட்கள்தாம். வேலைகளும் பழைய வேலைகள்தாம். ஆட்டம் முடிந்து கூட்டம் கலைந்து, வெறும் நாற்காலிகளும் மேடைகளும் மாத்திரம் நிற்கும் கொட்டகை போன்ற வெறிச்சிட்ட நாட்கள். கலகலப்பாயிருக்க முயன்றாலும், பேச்சில் அதற்குச் சம்பந்தமற்ற எண்ணங்கள் எதிரொலித்துக்கொண்டிருக்கும் நாட்கள். வாய்தான் பேசிச் சிரித்துச் சீறித் தணிந்து மறுபடியும் சிரித்தது. மெளனமும் ஆழமும் நிறைந்த கண்களுடன் சந்துரு மெதுவாய் மாடிப் படியேறுகையிலோ இறங்குகையிலோ, வளையவருகையிலோ, வீட்டில் வாழும் பாம்பு நடமாடுவது போலிருந்தது. சத்தியத் துக்குக் கட்டுப்பட்டு அதுவும் யாரையும் கடிக்காது. அதன் வழிக்கும் யாரும் போக முடியாது. எந்தப் புதையலை அப்படிக் காத்தானோ? சில சமயங்களில் கூடத்தில் மாட்டியிருக்கும் சுவாமி படங்களைப் பார்த்துக்கொண்டு நிற்பான். அவைகளில் கிருஷ்ணன் படம் ஒன்று. பாலகிருஷ்ணன், குஞ்சம் கட்டிய புல்லாங்குழலை அக்குளில் இடுக்கிக்கொண்டு படபடவெனச்