பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொட்டு மேளம் * 2贯$ குழந்தையைப் பெற்றவளாய் நீ வாய்த்துவிட்டாய். அவ்வளவு தான்.” “என்னை மன்னிச்சுடுங்கோ' "உன்னை மன்னிப்பது- அதோ கூடத்தில் அடுக்கடுக்காய் மாட்டியிருக்கும் அந்தப் படங்களைக் கேட்டுக்கொள். அது என் வேலையுமில்லை. அதற்கு எனக்குச் சக்தியுமில்லை. ஏனெனில் நான் மனிதன்- சந்துரு காதைப் பொத்திக் கொண்டு மாடிக்குப் போய்விட்டான். “என்னை மன்னிச்சுடுங்கோ' - ஜானா குழந்தையை வாரி மார்புடன் அனைத்துக் கொண்டாள். "அம்மா இந்தாம்மா- உன் பேரன்:- இப்பொழுதுந்தான் அழுகை வருகிறது. 'அம்மா என்னை மன்னிச்சுடுங்கோ' “எல்லாரும் உன்னை மன்னிப்பார்கள், அம்மா! கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் இருக்கும். எப்படியோ, இப்பவாவது வந்தையே!” "அக்கா என்னை மன்னிச்சுடுங்கோ" ஜானாவுக்குக் காது கேட்டதோ இல்லையோ, குழந்தை யைக் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அவனை மார்போடு தழுவிக் கன்னங்களை மாறிமாறி முத்தமிடுகையில் பையன் மூச்சுத்திணறி விசித்துக்கொண்டு திமிறப் பார்க்கிறான். ஜானா வுக்கு அந்த ஒரு நிமிஷத்தில் எல்லாம் மறந்துபோய்விட்டது. “என்னை மன்னிச்சுடுங்கோ!” . சந்துரு உள்ளுறக் கருகிப் போய்விட்டான். எவ்வளவு முயன்றும் அவனால் மறுபடியும் புஷ்பிக்க முடியவில்லை. ராமதுரையைப் பார்க்கையில், அவன் தனக்குள் ஏதோ மறந்து போனதை ஞாபகப்படுத்திக்கொள்வதுபோல் நெற்றிப் பொட்டைத் தேய்த்துக்கொண்டு நிற்பான்.