பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 令 லா. ச. ராமாமிருதம் "இந்தா தொலைச்சுக்கோ.” வண்டிக்குள்தான் எத்தனை பேர், எத்தனை விதமாய் உட்கார்ந்து படுத்து நின்று குமைந்து வருகின்றனர்! எத்தனை விதமான பேர்கள்- எங்கெங்கிருந்தோ எங்கெங்கேயோ போகிறவர் எஞ்சினின் ஊதல் ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு போகிறது. அதுவே ஒவ்வொருவருக்கு அவரவர் மனத்திற் கேற்ப, ஒவ்வொரு விதமாய்ப் படுகிறது. ஒருத்தருக்கு இருப்புக் குதிரையின் உற்சாகமான கனைப்பாயிருக்கிறது; ஒருத்தருக்குப் பின்வரும் விபத்தின் முன்னோலக் குறியாய் மனத்தில் 'சுறுக்கென்று தைக்கிறது. மூணு நாலு பேர் சேர்ந்தாற்போல் ஒரே பெஞ்சில் நெரிகின்றனர் “என்னப்பா உன்னை நம்பி-” "என்னத்தே என்னை நம்பி? நான்தான் அப்பவே சொன்னேனே- குதிரை என்னவோ நல்ல குதிரைதான், ஆனால் அந்த ஜாக்கி ஏறினால் கோவிந்தாதான் என்று! போனால் போறது போ- வர சனிக்கிழமை நைஜாம் பிளேட் இருக்கு போ-” "அடப்பாவி- என்னடா இருக்கு, இருக்கு என்கறே? இன்னிக்குப் போனால் வீட்டில் அவள் மூக்கைச் சிந்திச் சிந்திப் போடுவாளேடா! எப்படியடா போய் முழிப்பேன்? அவளுக்கு அப்பப்போ குடும்பச் செலவுக்குக் கொடுக்கிற பணத்தில், அவள் மிச்சம் பிடித்து, கடுகு டப்பாவிலும் மிளகு டப்பாவிலு மாய்ப் போட்டு வைத்திருந்ததையெல்லாம் பீராய்ந்து எடுத்துக் கொண்டு முப்பதை முன்னூறாய்க் கொண்டு வரேன்னு சொல்லி வந்தேன்!” - "என்னடா மூக்காலே அழறே? இங்கே மாத்திரம் வாழிறதோ? ஸ்வஸ்திக் வளையல் ஒரு ஜோடி அடித்துப்