பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ரயில் 225 போன மாஸம்தான் அவள் பிறந்த வீட்டில் போட்டார்கள். இன்னிக்குக் கழட்டிக் கொண்டு வந்து இங்கே கப்பங் கட்டி யாச்சு- எல்லாம் இப்படித்தான்-”

   “ஒருநாள் வரதுதான், ஒருநாள் போறதுதான் இதெல்லாம் பார்த்து முடியாதப்பா.” - 
   “என்னப்பா பண்ணுவே- இன்னிக்கு உனக்கு இந்த வேதாந்தமிருப்பது ஒண்ணும் வினோதமில்லை- உன் ஜேபியிலே, லட்சணமாய் நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு பதுக்கியிருக்கையோன்னோ!”
  “எனக்கு எல்லாம் ஒண்ணுதான்- இருந்தாலும் ஒரே பேச்சுதான்; இல்லாவிட்டாலும் அதே பேச்சுதான்; என்னவோ- என்னய்யா- என்னய்யா அவ்வளவு அவசரம்? மேலே இடிச்சுண்டு ஒடறே! எதிரே நிக்கறேனே கல்லாட்டமா, தெரியல்லே?”
  “இல்லை, மன்னிக்கவும்- இந்த ஸ்டேஷனில் தான் இறங்கணும்- அடிபட்டுடுத்தா?”
   “அதெல்லாம் ஒண்ணுமில்லேன்னா! பரவாயில்லே, போங்கோ- வண்டி பாலாயிடுத்தே-”
   "டிக்கட் டிக்கட்-” 
   "இதோ உள் ஜோபியிலே- ஐயையோ!" 
   “என்ன என்ன?”- வண்டி முழுவதும் ஒரே கலவரம், ஆரவாரம்
   “பைக்குள்ளே தேளா, கொட்டிடுத்தா?” 
    "ஐயையோ! என் காசைக் காணோமே- கடியாரத்தைக் காணோமே- பர்ஸ்- டிக்கட்-”
   “அதனால் என்னப்பா, நீதான் சொன்னையே- இருந்தாலும் ஒண்ணு தான், இல்லாவிட்டாலும் ஒண்ணு தான் என்று- எல்லாம் நீ சொல்லிக்கொடுத்த வேதாந்தம்தானே-”