பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ரயில் 229 வெடித்திருக்கிறது. இன்னோர் இடத்தில், துக்கம் நிறைந்த உள்ளத்தினின்று பிழியும் கண்ணிர்போல் சதுப்பு நிலத்தில் ஜலம் கசிகிறது. இன்னொரு சமயம், பாலத்தினடியில் இரு மருங்கிலும் கண்ணாடித் தகடு வார்த்தாற்போல் ஏரியில் தண்ணிர் விளிம்பு கட்டி அசைவற்று நிற்கிறது.

  ஒரு சமயம், கோபத்தில் வெதும்பும் மனம்போல், வானத்தில் மேகங்கள், கறுத்தும் வெளுத்தும் புழுங்குகின்றன். இன்னொரு சமயம் ஆகாயம் பிரேதம்போல் ஒரே நீலமாய்ப் பூரித்திருக்கிறது.
 ஒரு சமயம், மாலை வேளையில் மலரும் மலர்களின் மணம், மனத்தை மயக்குகிறது. மறுசமயம் ஜதையில் வேகும் பிணத்தின் நிணம் மூக்கைப் பொசுக்குகிறது. வண்டி ஒரு மூலையில் திரும்பியதும் அதோ சவுக்குத் தோப்புக்கப்பால், சுடுகாட்டினின்று எழும் ஜ்வாலைகளே தெரிகின்றன.
 வேளை முதிர முதிரக் கவியும் இருளில், ஒரு விளக்கு ஒளி மினுக்கென்று தோன்றுகிறது. கண்மூடி வழிகாட்டும் லட்சணம் போல், எட்டியும் கிட்டியும் நிலையற்று எரிகிறது.
 ரயிலில் பெஞ்சோரத்தில் ஒருத்தி இத்தனை பேரிடை யிலும் தன்னந்தனியாய்ப் பதுங்கிக் கிடக்கிறாள். பாம்பின் கண்ப்பட்ட இரைபோல் பார்வை நிலை தவறி, ஒரே குத்தலில் விறைத்திருக்கிறது. மார்த்துணி சரிந்திருப்பது கூட அவளுக்குத் தெரியவில்லை. வண்டி அலறும் போதெல்லாம். அவள் கைகள் அவளை அறியாமலே, அடி வயிறைப் பிட்டாய்ப் பிசைகின்றன.
 அவள் போய்ச் சேரும் இடத்தில் என்ன காத்திருக்கிறதோ அவளுக்கு! வண்டி இவ்வளவு சீக்கிரம் பிரயாண முடிவை நெருங்குகிறதே எனும் பயங்கரம் ஒரு பக்கம், ஐயோ! இந்தச் சங்கடத்தைச் சகிக்க முடியவில்லையே! ஒரே வழியாய்ச்