பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஜனனி <e 25 அம்மாள் மற்றவரிடம் விதவிதமாய்ச் சிங்காரச் சொல் வைத்து முறையிடுவதைக் கேட்டுக்கொண்டு, ஐயர் ஒவ்வொரு நாள் வந்துவிடுவார். "ஏண்டி கரிக்கிறே குழந்தையை? உன் கண் சுட்டெரிப்புக்காவது அவள் அகமுடையான் அவளைக் கூட்டிக்கொண்டு போக மாட்டானா?” அவ்வளவுதான். இடுப்புக் குடத்தைப் பொத்தென ஜலம் தளும்பித் தெளிக்கக் கீழே வைத்துவிட்டு, முன்றானையை வரிந்து கட்டிக்கொண்டு, காற்றைக் கையால் துழாவிக் கொண்டு, அம்மாள் சண்டைக்கு வந்துவிடுவாள். "நன்னாச் சொல்லுங்கோ ஜனனி கவலையை ஜனனி இதுவரை பட்டதில்லை. அவளைப் பெத்தவா கவலையை நீங்க வாங்கிண்டு, ஆத்துக்குக் கொண்டு வந்துட்டேள். வளத்த கவலையை நான் பட்டாச்சு கல்யாணமானாக் கஷ்டம் விடியு மான்னா, அவள் புகுந்த கவலையையும் பட்டுண்டிருக்கோம் இன்னும்- போறுமோன்னோ- திருப்தியாச்சா?” வார்த்தைகளால் குத்தி வாங்குவதில், அம்மாள் அலாதி வரப்பிரசாதி. ஐயர் அப்படியே தலை கவிழ்வார். 2% 卒 来 ஜனனி ஒருநாள் பகலில் குளத்தில் குளித்துக்கொண் டிருந்தாள். கிணற்றடியில் குளிப்பதைவிட குளத்தில் துளையத் தான் அவளுக்கு இஷ்டம். அம்மாளுக்கும் அவளுக்கும் இதைப் பற்றி வேண்டிய தகராறு உண்டு. அம்மாள்- ஒன்று சொல்ல வேண்டும்-படி தாண்டாள்; வம்பு எல்லாம் அவளைத் தேடிக் கொண்டு வருமேயொழிய, அவளாக வம்பைத் தேடிக் கொண்டு வெளிக் கிளம்பியதில்லை. "மேட்டிமைக்காரி, ராங்கி” என்று பொறாதவர் குற்றம் சொன்னாலும், அம்மாளை நேரில் கண்டால் எல்லோருக்கும் பயந்தான். அத்தனைக்கத்தனை ஜனனியின் கலகலப்பு