பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

34 * லா. ச. ராமாமிருதம் னார்கள். கிட்டப் போகக்கூட அஞ்சியவர்களில் ஒருவன், தைரியம் கொண்டு, மாப்பிள்ளை மார்பில் கையையும், காதையும் வைத்துப் பார்த்தான். செத்துப் போனவர்களுக்குச் செத்தது தெரிந்திராது; அவ்வளவு விரைவில் பிராணன் போயிருந்தது. "ஜனனீ! என்னடி?” ஜனனிக்குக் கண்களில் ஜலம் ஆறாய்ப் பெருகிற்று. ஆனால் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது. “பலே! ஜனனீ!” என்று ஒரு வெறிக் குரல் அவளுள்ளே எழுந்தது. "ஐயோ! ஜனனீ! என இன்னொன்று விக்கி விக்கி ※ 来源 来源 "ஜனனி, ஜனனீ!” அவள் திடுக்கென விழித்துக்கொண்டாள். இந்த நள்ளிரவில் மையிருளில் யார் அழைப்பது? அவளுள் எழுந்த வினாவிற்கு அக்குரல் உடனே பதிலளித்தது. "ஆம், ஜனனீ! உன்னை மீட்கத்தான் வந்தேன். ஆயினும் நீ நினைக்கும் மீட்சியல்ல. உன்னை உனக்கு உணர்த்த வந்தேன். நீ உணர்ந்தால் நீ மீள்வாய்.” ஜனனி திடீரென உணர்ந்தாள். நள்ளிரவில், மையிருளில், குழலினிமையில் வரும் இக்குரல், வெளியினின்று வராது, தன்னுள் இருந்துதான் வருகிறதென்று உணர்ந்தாள். இக்குரல் மெளனமாயும், அன்பாயும், அதே சமயத்தில் ஒர் அழுத்தத் துடனும் ஒலித்தது. எங்கேயோ, எப்போதோ கேட்ட மாதிரி இருந்தும் இந்தப் புதுக்குரல் அவளுக்கு பயமாக இருந்தது. அவளையுமறியாது அவள் நாக்கு “நீ யார்?" என்னும் வினாவை உருவாக்க முயன்றது.