பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36 * லா. ச. ராமாமிருதம் உன்னுள் புரண்டதால், நான் வெளிவந்தேன். என் கைகள் ஒடிந்திருக்கின்றன. இருந்தும் உன்னை அணைக்கத்தான் நீட்டுகிறேன். நீ நானாக இருப்பினும், நான் நானாய்த்தான் இருக்க முடியும். நான் நான்தான். நான் நீயாக முடியாது. நீதான் நானாக முடியும் எனக்கு 'நா'னிலிருந்து மாறும் இயல்பு இல்லை. "ஜனனி, நீ இதை அறி. இப்பொழுது நீ- என்னிலிருந்து பிரிந்த நீ- மறுபடியும் 'நா'னாய்க் கொண்டிருக்கிறாய். அதனால்தான் நான் மறுபடியும் உன்னில் உருவாக முடிகிறது. எங்கும் பரவி நிலையற்று உருவற்றது. உருவற்ற நிலையி லிருந்தே உருவாய்ப் பிரிய முடியும். அவ்வுருவற்ற நிலையின் சாயையை, அவ்வுருக்கள் தாங்கியிருப்பினும், அவை அவ்வுருவற்ற நிலையின் பிளவுகள்தாம். ஏனெனில் முழுமையின் துண்டங்கள் அவை. அப்பொழுது, துண்டங்களின் துண்டங்கள் முழுமையின் எவ்வளவு பின்னம்! ஆகையால் ஜனனி, ஜனனம் எவ்வளவு பின்னம்! ஆயினும் துண்டங்கள் இன்னமும் துண்டமாகி, பொடியாகி, அப்பொடி இன்னமும் பொடிந்து மறுபடியும் உருவற்ற நிலையில்தான் கலந்து விடுகின்றது. ஆகையால் ஜனனி நீ என்னில் மூழ்கினால், நீயே நானாய்விடுவாய். இதுதான் உன்னின் மீட்சி. இதுதான் 'உன்னின் மீட்சி. மீட்சி” அந்தக் குரல் மறுபடியும் அவளுள் அடங்கியது, குழலின் நாதம்போல். ஜனனி பதினைந்து வருஷங்கள் சிட்சை விதிக்கப் பட்டாள். ஆனால் அவள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட வேண்டியவளா, சிட்சைக்கு அனுப்பப்பட வேண்டியவளா என்று சரியாய்த் தீர்மானிக்க முடியாமலே போயிற்று. வாயடைத்துப் போய்விட்ட்தால், கடைசிவரை மணவறையில், அவளுக்கும் அவள் கணுவனுக்குமிடையில் என்னதான் நடந்ததென அறிய முடியாமல் போயிற்று. வைத்தியர்கள்