பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகம் & 4; காலத்தில் புழுத்துப்போன உடல் வேக, மற்றப் பினங்களை விடக் கட்டையும் முட்டையும் இரண்டு அடுக்குகள் நிறைவாய்த் தான் பிடித்தன. ஆனாலும், அதனால் பெரிய மனிதனுக்கு அடையாள மாய் மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட நியமங்கள் மாறவில்லை. காலம் கடந்தது. பின்னால் வந்தவர் போனவர்களுக்கும், அந்த ரோடு பிடிக்கவில்லை. அதை அழித்தார்கள். இச்சமயம் அந்த மேட்டு நிலத்தில் இட்ட ரெயில் தண்டவாளம் கிடுகிடுக்க ஒரு புகைவண்டி கர்ரென்று சீறிக் கொண்டு வளைந்து வளைந்து வெகு வேகமாய் ஓடியது. ஒருநாள்: அளவுக்கு மிஞ்சிய வேகந்தானோ, அல்லது தண்ட வாளத்தில் பாராதுபோன பழுதின் காரணமோ, அல்லது மனிதன் தனக்குள் தான் ஒற்றுமையின்றி இடும் பல சண்டை களில், ஒரு தரத்தவர் தண்டவாளத்தில் பாதியைப் பிடுங்கி எறிந்ததனாலோ, ஒடிக்கொண்டிருந்த வண்டித்தொடர் திடீரென நிலை தவறி, இரையுண்ட மலைப்பாம்பைப் போல் அப்படியே புரண்டு சாய்ந்தது. ஏகநாசம், உயிர்ச்சேதம்! தந்தியிலும் தபாலிலும் ஒலியிலும் செய்தி பறந்தது. அப்புறம் அந்த ரெயில் பாதை உருப்படவில்லை. அதையும் அழித்தார்கள். இருக்கிற தண்டவாளத்தையும் பிடுங்கி எறிந்தார்கள். 'கிராவல் கற்களை நாலுபுறங்களிலும் வாரி இறைத்தார்கள். அழித்ததை இழைத்து, திரும்பவும் இழைத்ததை அழித்து.