பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகம் & 45 அந்தண்டை மறைந்த பிறகு அந்தக் கல்லின் மேல், ஒரு கொத்து எச்சில் வழிந்திருந்தது. இரவும், அதில் அங்கும் இங்குமாய்ச் சுடர்விடும் நக்ஷத்திரங்களும் பொத்தல் கண்ட குடைபோல் பள்ளத் தாக்கின் மேல் கவிந்தன. நிசப்தம், பிறகு அருகிலிருக்கும் சுடலையினின்று ஒரு நரியின் ஊளை மறுபடியும் மெளனம். பொழுது புலரும் வேளையில், மேட்டில் இருந்த மரங்களுள் ஒன்றிலிருந்து உதிர்ந்த ஒரு பூக்கிண்ணம் கிரீடம் போல் அந்தப் புதைந்த கல்லின் மண்டைமேல் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தது. பருவங்கள் மாறின. காலத்தின் போக்கில் என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அந்தப் பள்ளத்தின் பக்கவாட்டில் ஒர் ஊற்றுக் கண்டது. குளுகுளுவென்று பளிங்கு போன்ற ஜலம் மடுவின் அடிவயிற்றிலும் அதிலிருக்கும் கற்கள் மேலும் பாய்ந்தது. ஒடிய ஜலம் அந்தப் புதைந்த கல்லை நன்கு குளிப்பாட்டி, சுற்றி ஒட்டிக்கொண்டிருந்த சேற்றையும் மண்ணையும் பறித்துக்கொண்டு போயிற்று. கல்லின் மண்டை அகன்றது. நாளடைவில், ஒடும் ஜலம் கொஞ்சம் ஒதுங்கி, அங்கு எங்கோ ஒரு புரையுள் மறைந்து, அரை மைலுக்கு அப்பால் ஒரு சிறு வாய்க்காலாய் வெளிப்பட்டது. பலநாள் மலடி ஒருநாள் தன் வயிற்றில் வித்துத் தங்கியதை உணர்ந்ததுபோல், அந்தப் பள்ளம் திடீரென்று ஒரே புஷ்பச் செடி மயமாகப் புளகித்தது. திடீரென்று அதில் சொரிந்த அழகு, 'இதென்னவென்று கண்ணைக் கசக்கிக்