பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 * லா. ச. ராமாமிருதம் கொண்டு நோக்கும்படி இருந்ததேயொழிய கண்டவுடன் நம்பக் கூடியதாயில்லை. வசந்தம் அங்கே தங்கி விளையாடியது.

ఫి: *

பிற்பகலில் பாதி கழிந்திருக்கும். வெயில்கூட அங்கே தெரியவில்லை. இளந்தம்பதிகள் இருவர் அங்கு வந்தனர். அவன் வெள்ளைக் குடுத்தா உடுத்திருந்தான். அவள் பட்டுப் புடவை கட்டியிருந்தாள். மண வாழ்வின் மணம் இன்னமும் இருவரிடமும் கமழ்ந்து கொண்டிருந்தது. அவளுடைய மை தீட்டிய விழிகளில் அவனை வெற்றி கொண்ட வெறி கூத்தாடியது. இருவரும் ஒருவரை ஒருவர் ரகசியமாய்ப் பார்த்துக்கொண்டு, ஒருவரில் ஒருவர் மகிழ்ந்து கொண் டிருந்தனர். நெஞ்சத் துடிப்பைப்போல் படபடத்துக் கொண்டு அருவி ஜலம் ஒடுவதைக் கொஞ்ச நாழிகை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அந்தச் சிவப்புக் கல்லின் மேல் ஒரு காலை வைத்துக்கொண்டு சின்னச் சின்னக் கற்களாகப் பொறுக்கி ஒவ்வொன்றாய் அந்த ஜலத்தில் போட்டாள். அவன் கீழே உட்கார்ந்து, அவள் கல்மேல் ஊன்றிய காலைப் பெயர்க்க முயன்றான். அவள் காலை இன்னும் அழுத்திச் சிரித்தாள். அம்மி மிதித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது போலும்! அதற்குள், அங்கே ஜலத்துள் துள்ளிய ஒரு மீன் குட்டியின் மேல் அவன் கவனம் பாய்ந்தது. அவன் கவனம் தன்னைவிட்டு மாறுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. புன்னகை புரிந்த வண்ணம் அவன் மடியில் அவள் சாய்ந்தாள். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தை ஒத்தியது. அவனுடைய குனிந்த பார்வை கனிந்தது. உதடுகள் மெளனமாய் என்னவோ வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு அசைந்தன.