பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& யோகம் ** 49 தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். நீ உயிரோ டிருக்கையில் நாம் இருவரும் பிரியாமல் இருப்பதைப்பற்றி யோசனை பண்ணுவோம். இன்னும் ஒரு வாரத்தில் வந்து உன் அம்மா உன்னைக் கூட்டிக்கொண்டு போவதாய்ச் சொல்லியிருக்காளே, அப்பொழுது போகாமல் இரேன்.” அவள் யோசனையாய் நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள். "இப்பொழுதுதானே ஒரு மாதத்துக்கு முன்னால் போய் விட்டு வந்தாய்? அடிக்கடி இப்படிப் பிரிந்துகொண்டிருந்தால் நாம் எப்பொழுது ஒட்டுவது? உனக்கும் உன் தாய்மேல் ஆசை இருக்கும்; அவளுக்கும் பெண்மேல் இருக்கும் இல்லையென்று சொல்லவில்லை. இருந்தும் உன் புதுவாழ்வுக்கு நீ பழக வேண்டாமா? இன்னமும் இந்தப் பிறந்த வீட்டுச் சபலத்தை அடக்கிக்கொள்ளச் சக்தியில்லாவிட்டால் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவானேன்? அவள் எழுந்து உட்கார்ந்துவிட்டாள். முகம் ஒரு தினுசான மருட்சியில் வெளுத்துவிட்டது. அவன் வார்த்தைகள் அவள் மூளையில் என்ன வேலை செய்தனவோ தெரியவில்லை; அடிக்கடி கை நகத்தால் அழுந்த வாரியிருக்கும் மயிரைக் கீறிக்கொண்டாள். அவள் முகத்தில் புகுந்துவிட்ட ஒரு சிறு கடடு அதற்கு ஒரு குறுகுறுப்பையும் தனியழகையும் கொடுத்தது. அவள் அவன்மேல் வைத்திருந்ததைவிட, அவன் அவள் மேல் வைத்திருக்கும் ஆசையின் மிகுதி அவன் தன்னையும் மறந்து அவளைக் கெஞ்சும் குரலிலேயே வெளிப்பட்டது. 'அன்றொரு நாள் சொன்னையே, ஞாபகம் இருக்கிறதா?” “என்ன?” என்னும் வினாவில் அவள் புருவங்கள்பென்ஸிலால் கீறியதுபோல், சுத்தமாய் வளைந்த புருவங்கள் உயர்ந்தன.