பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 இலக்கியச் சுரங்கங்கள் போன்ற பல பத்திரிகை களிலிருந்து கதைமணிகள் சேர்த்து 'ஜனனி' என்ற ஆரம் செய்திருக்கிறார் ஆசிரியர். வாசகர்களின் இதயத்தில் இதன் ஒளி வீசும் என்பது நிச்சயம். தமிழ் வாசகர்களது உள்ளத் துடிப்பின் ஒரு அம்சத்தின் உருவம்தான் ஜனனி. ஒரு அமானுஷ்யமான தெய்வீகச் சூழலை மையமாக வைத்து, காவியம் போன்று இச்சிறுகதைகளைச் சிருஷ்டித்திருக்கும் எழுத்துச் சித்தர் லா. ச. ரா.-வுக்கு வானதியின் வணக்கங்கள் உரித்தாகுக. அன்புள்ள ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்