பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 * லா. ச. ராமாமிருதம் "சீதைக்கு ராமர் இருக்கும் இடந்தான் அயோத்தி-” அவள் முகத்தில் அசட்டுப் புன்னகை தோன்றிற்று. "சொல்லுக்கு அலங்காரமாய்ச் சொல்லிவிட்டால் ஆகி விட்டதா? கொஞ்சமாவது காரியத்தில் நடத்திக் காண்பிக்க வேண்டாமா? அதற்கு உனக்கு வயசாகவில்லையா? நாம் இருவரும் சந்தோஷமாயிருக்கிறதே இன்னமும் நாலைந்து வருஷங்கள், பிறகு எனக்கும் வயசாகிவிடும். உனக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துவிடும். பிடுங்கல்களும் அதிகரித்துவிடும். பொறுக்காமல் நானே ஒருநாள், பிறந்த வீடு போய்த் தொலை' என்பேன்!” அவனுடைய தமாஷ் அவளுக்கு ஏறவில்லை. “என்ன சொல்லுகிறாய்?” அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. பக்கத்துப் புதரில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பூவைப் பறித்து அதை இதழ் இதழாய்ப் பிய்க்க ஆரம்பித்தாள். அவளுடைய அழுத்தமான மெளனம் அவன் பொறுமையை வெகுவாய்ச் சோதித்தது. தவிர, அவள் பதில் சொல்லத் தேவையேயில்லை. அவன் ஆசையையே கசக்குவது போன்று அந்தப் பூவை இதழ் இதழாய்ப் பிய்த்துக்கொண்டிருக்கும் அந்த இரக்கமற்ற காரியமே போதுமான பதில். சகிக்க முடியாத வேதனையில் அவன், "நீ வேனுமானால் பிறந்தகம் போ அந்தப் பூவை மாத்திரம் பிய்க்காதே’ என்று கத்தினான். திடுக்கிட்டு அவள் நிமிர்ந்தாள். சரசரவென்று கண்கள் நீரால் நிறைந்தன. “இல்லே, நான் போகல்லே-” “இல்லை, போய்க்கொள்-” இனி அவள் போனாலும் போகாவிட்டாலும், அவன் அவளைப் பிரியத்தால் கட்டி இணைக்க முயலும் முயற்சியில்