பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகம் ళ్యీతి 53 “அவனவன் எதைக் கஷ்டமென்று பார்க்கிறானோ அதனின்று விடுதலை வேண்டாதவனே இல்லை. இந்தக் கடவுள்தன்மையை மனிதன் வேண்டுவது நியாயமே. ஆனாலும் அவனுக்குக் கடவுளுடன் கலக்க விருப்பமில்லை. போட்டிக் கடவுளாய் ஆகத்தான் விரும்புகிறான். வெறும் மாமிசபர்வதமாக வளர்ந்த ஒரு திமிரினாலேயே நல்லவர் களுக்கு நல்லவனாகவும் பொல்லாதவர்களுக்குப் பொல்லாத வனாகவும் தான் இருப்பதாகப் பாவித்துக்கொண்டே நல்லவர் களையும் பொல்லாதவர்களையும் கண்டுவிட்ட மேதாவியாய்த் தன்னைத்தானே நினைத்துக்கொண்டு, கடவுளே செய்யத் திணறும் காரியத்தைத் தான் செய்ய முன்வந்து, அவன் காரியமே அவன் கழுத்தை அறுப்பது அவனுக்குத் தெரிவதில்லை. “உலகத்தில் காக்கப்படுவனவற்றைவிட, கடவுள்கள் அதிகமாகிவிட்டன. சூளைக்கற்கள் எல்லாம் தெய்வமாய் விட்டன: தெய்வம் கல்லாகிவிட்டது. “மனிதனுக்கு மனிதன் இப்படித்தான் முழுவதன் ஒருபாகம் என்று தெரிந்தும், எல்லாமே தன்னால்தான், தானேதான் எல்லாம் என்று.” இந்தச் சமயத்தில் ஒரு காற்று அடித்து அவன் கைக் காகிதத்தைப் பிடுங்கி அடித்துக்கொண்டு போயிற்று. அவன் எட்டிப்பிடிக்க முயன்றான். - ஆயினும் அவன் கைக்குத் தப்பி அது சிவப்புக்கல்லின் மேல், ஆணியால் அறைந்தாற்போல் ஒட்டிக்கொண்டு படபடவென்று இறக்கை மாதிரி அடித்துக்கொண்டது. அதற்குள் அவனுக்கும் சோம்பல் வந்துவிட்டது. “நானும் என்ன, சொன்னதையேதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்!” என்று முணுமுணுத்துக்கொண்டு அதிருப்தியுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.