பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோகம் & 55 நான் இல்லாட்டா நீ இல்லை, இந்தக் காலத்திலேயே எல்லாம் கைமேலே பலன், ஞாபகம் வெச்சுக்கோ! நீ எனக்குச் சரியா யிருந்தால்தான் உன் பிள்ளை உனக்குச் சரியாயிருப்பான். ஆனால் எனக்கு இந்தக் கதி வரவேண்டாம்!” "அம்மா!” டேய், எல்லாரும் பிள்ளை பெத்தாலும் நான உன்னைப் பெத்ததற்கு ஈடாகாது. எத்தனை தவங்கிடந்திருப்பேன்! எத்தனை அரசமரம், கோயில் குளம் சுத்தியிருப்பேன்! எத்தனை கோபுரவாசற்படியை நெய்யால் மெழுகியிருப்பேன்! இடது கையால் சாப்பிட்டிருப்பேன்! உனக்காப் பிள்ளைப் பூச்சிகூட முழுங்கி இருக்கேண்டா. என் ரத்தத்தின் ரத்தம் நீ சதையின் சதை நீ. நீ எனக்கு ஒரே பிள்ளையாய் வாய்ச்சு, எனக்கு நீ துரோகம் பண்ணலாமா? அதுவும் இத்தனை நாள் நல்ல பிள்ளையாய் இருந்துட்டு இப்போ கல்லைத் தூக்கிப் போடலாமா? நல்ல பிள்ளைக்கு அடையாளம் கல்லைத் தூக்கிப் போடுவது, கல்லைத் தூக்கிப் போடுவது வலிப்பு வந்தவள்போல் அவள் பாட ஆரம்பித்துவிட்டாள். ஆத்திரத்தின் வேகத்தில் இருந்த ஒன்றிரண்டு பற்களினின்று ரத்தம் கொட்டியது. “ஆரம்பத்திலேயே நீ இப்ப இருக்கிற மாதிரி இருந் திருந்தேன்னா, சீ, தத்தாரி, நமக்குக் கொடுத்து வைச்சது இவ்வளவுதான் என்று துப்பியெறிந்திருப்பேன். மற்றத் தாய்மார்போல் இல்லை நான்! உன் பிள்ளையா இப்படிப் பண்ணினான், உன் பிள்ளையா? என்று என்னை எல்லாரும் துக்கம் விசாரிக்கறப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? திடீரென்று கிழவி அழ ஆரம்பித்துவிட்டாள். “இத்தனை நாள் நான் என் புருஷனைப்பத்தி நினைக்கல்லே. உன்னைப் பார்த்து எல்லாத்தையும் மறந் திருந்தேன். ஆனால் இப்போ அவனை நினைக்கிறேன்;