பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 & லா. ச. ராமாமிருதம் சபிக்கிறேன், இப்படி என்னை விட்டுட்டுப் போயிட்டா னேன்னு: உழைக்கிறதெல்லாம் உழைச்சுப்பிட்டு, உன் சமாசாரத்தை எப்படியோ தெரிஞ்சுண்டு, உன் கையை எதிர்பாராமல், முன்னாலேயே செலவு பெத்துண்டுட்டாரே, உங்கப்பா கெட்டிக்காரரா, நான் கெட்டிக்காரியா? நீயே சொல்லு” அவள் பிள்ளை கண்களில் கண்ணிர் தளும்பியது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறான். "அம்மா, இப்படியெல்லாம் சொல்லாதேம்மா- கிழவி கண்ணைத் துடைத்துக்கொள்கிறாள். "வாஸ்தவந்தாண்டாப்பா. நான் ஏன் சொல்லனும்? இப்போ ஒரு காரணமும் இல்லாமலே நான் அநுபவிக்கறது போறாதுன்னு என் வாயால் உன்னை ஏன் சபிக்கணும்? கலி இப்பவே முத்திப் போச்சு கலி முத்தித்துன்னா பகவான் அவதாரம் பண்ணுவார். அப்போ அவர் பார்த்துக்கறார். இப்பவே அவதாரம் பண்ணிண்டிருக்காரோ என்னவோ! உன்னைப் பார்த்தாலும் என் வயிறு ஒட்டிக்கிறது. இப்படி என் வாயாலே நீ கேக்கனுமான்னு, எரிச்சல் தாங்காத சமயத்தில் கத்தறேன், ஒயறேன். கத்தறேன், ஒயறேன். இப்படித் தான் நான் சாகற வரைக்கும் இருக்கப் போறதோ, என்னவோவா, வா உனக்காச்சு, எனக்காச்சு...” திடீரென்று எப்படி முன் அறிகுறியில்லாமல் அந்த ஊற்றுக் கிளம்பியதோ அதே மாதிரி வறண்டு போயிற்று? மறுபடியும் பற்களிலும் மணலிலும் கொதிப்பு ஏறத் தலைப் பட்டது. கானலில் மடு திரைப்படம் போல் நடுங்கிற்று. ஒருநாள் காலை, ஒரு பிணம் மேட்டில் ஒரு மரக்கிளையி லிருந்து தொங்கிற்று. அக்கிளையின் நிலையும், அதனின்று தொங்கிக் கழுத்தை முறித்த கயிற்றின் உரமும், காலடியில்