பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& யோகம் ఈస్ట్రో 57 உருண்டிருந்த சிறு முக்காலியும் இறந்தவனின் முன்னேற் பாட்டை விளக்கின. இரவின் மிருகங்கள், வாய்க்கு எட்டிய வரையில் கால் விரல்களைக் கடித்துப் பாதங்களைக் கூழையடித்திருந்தன. சுவரில் விளம்பரம் ஒட்டியது போன்று, பிரித்த கடிதம் ஒன்று அவன் மார்புப்புறத்தில், சட்டையோடு குண்டுசியால் குத்தி விட்டிருந்தது. அதில் அவன் தற்கொலைக்கு காரணத்தை விளக்கியிருந்தான்: “என் பிணத்தைப் பார்ப்பவர் முக்கியமாய் இந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்.” “எனக்கு உலகத்தில் வேண்டாத பேர், வேண்டிய பேர் உண்டு. ஆனால் அவர்கள்மேல் சந்தேகம் வேண்டாம். இது என் காரியமே." “ஒன்பது வருஷங்களாக எனக்கு வயிற்றுவலி. நான் பண்ணிக்கொள்ளாத வைத்தியம் இல்லை. ஆயினும் குணம் இல்லை. ஒவ்வொரு சமயமும் தொப்புளைச் சுற்றி வலி. திருகுகையில் நான் ஒன்பது சாவுகள் சாகிறேன். அதுவும் ஒரு நாளா, இரண்டு நாளா? ஒன்பது வருஷங்கள்:” “என் போன்ற கேஸ்கள் சாவைத் தேடினால் அது விடுதலையை வேண்டியே ஒழிய, பயங் கொள்ளித்தனத்தால் அல்ல. ஆகையால் நான் இறந்த பிறகு என் ஆவியைத் தேவதூதர்கள் கொண்டு போய் ரகடிகளின் சந்நிதானத்தில் நிறுத்தும் சமயத்தில் கன்னிமாதாவும், தேவகுமாரனும் எனக்காக லோக பிதாவிடம் மன்றாட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஆமேன்.' அப்புறம் அதிக நாள் அந்தப் பக்கம் அண்டுவார்கூட இல்லை. எட்ட இருந்து பார்க்கையில் அந்த இடமே, அதன் 5