பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 * லா. ச. ராமாமிருதம் புதுத் தனிமையாலோ, அல்லது பயங்கரத்தால் சிலிர்த்துக் கொண்டதாலோ, முன்னிலும் பெரியதாய்த் தோன்றிற்று. செவி நுட்பத்தில் கற்பனை படைத்த சிலர் உச்சிவேளையிலும் இரவிலும், அப்பா, அம்மா, வலி பொறுக்க முடிய வில்லையே! என்றெல்லாம் குரல்கள். அந்த மடுவிலிருந்து வெளிவருவதாகச் சத்தியம் செய்தனர். ஆயினும் காலம் மாற்றாத காரியம் ஏது? நாளடைவில் மடுவிலிருந்து வருவதாகக் கூறப்படும் ஓசைகள், தாமே கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிக் கடைசியில் அற்றுப் போயின. மறுபடியும் ஆள் நடமாட்டம் அங்கே தொடங்கிய பொழுது அந்தப் பள்ளத்தில், முழங்கால் உயரத்துக்கு இலைகளும் சருகுகளும், காற்று அடித்துச் சேர்ந்திருந்த குப்பையும் நிறைந்திருந்தன. அந்தச் சிவப்புக்கல் கூடத் தலை தெரியாமல், அந்தக் குப்பையுள் முழுகிப் போயிற்று. ※ ※ “என்னடி இவ்வளவு அவசரமாய் என்னை இங்கே கூட்டிண்டு வந்தே? காரியமெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. இன்னும் கொஞ்ச நேரமாச்சுன்னா, ஆபீசிலிருந்து அவர் வந்துடுவார். நீ கூப்பிட்ட அவசரத்தைப் பார்த்துட்டுக் கையை அப்படியே முன்றானையிலேயே துடைச்சுண்டு வந்துட்டேன். என்ன விசேஷம்? என்னடி, மூஞ்சியெல்லாம் வெளுத்திருக்கு? ஏண்டி அழறே? என்ன, என்ன?” மற்றவள் விக்கினாள். “எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல்லே. நான் ரெண்டு மாசமா ஸ்நானம் பண்ணல்லே.” “என்ன!”- நெருப்பைத் தொட்டுவிட்டவள்போல் இருந்தது அவள் குரல். “என்னைக் கோவிச்சுக்காதே. நான் சொல்றத்தை முழுக்க வாங்கிக்கோ, ஐயோ! நான் என்னடி பண்ணுவேன்! இந்தச்