பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 & லா. ச. ராமாமிருதம் வலக்கை, பொம்மனாட்டிகளுக்கு இடக்கையைப் பார்த்துச் சொல்றதாமே? "இந்தக் கைரேகையைப் பார்த்து, நடந்தது நடக்கப் போகிறது எல்லாம் சொல்லலாமாமே? உடனே என் வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் நெனைச்சுண்டேன். இந்த மனசு போற போக்குத்தான் என்ன! "நான் இதுவரை என் ஆம்படையானைப்பத்தி அதிகமா நெனச்சதில்லே. அவர் போறப்போ எனக்கென்ன பிரமாத வயசா? அக்ரமம்! அக்ரமம்! ஆனால் வயசாக ஆகத்தானே ஒவ்வொண்ணாத் தோணறது. போனதுதான் போனாரே, ஒரு குழந்தையையாவது அடையாளமா வெச்சிட்டுப் போனாரா? அதுக்குப் பாலூட்டுகையில், அதன்மூலம் அதன் பசியை ஆத்தி, அத்தோடு எனக்கு இருக்கும் எத்தனையோ பசிகளும் ஆறியிருக்கும். "இப்போகூடத்தான் கேக்கறேன். என்னைப்போல இருக்கிறவா கதிதான் என்னிக்குமே விடியாக் கதி. இந்த லோகத்தில் இப்பவும் வாழாவெட்டிகள் எத்தனைபேர், உயிரோடிருக்கிற ஆம்படையானை விட்டுப் பிரிஞ்சிருக்கா? பிரிஞ்சிருக்க முடியறது, கலியாணத்துலே நாலுபேருக்கு நடுவிலே பண்ணிக்கொடுத்த சத்தியத்தையெல்லாம் மறந்துட்டு? அத்தோடு கொண்டவனையும் தூத்திண்டு ஊரிலேயும் எப்படி வளைய வர முடியறது? “என் மாதிரிப் பேர் மனசைத் திருப்ப, எவ்வளவுதான் படிச்சாலும், பாஸ் பண்ணினாலும், என்னதான் அறிவை வளர்த்தாலும், இந்த உடலும்கூட வளர்றதேடி இந்த உடல் என்கிறது அவ்வளவு லேசாயிருக்கா? அதுவே நம் கட்டுப் பாட்டுக்கு வந்தபாடில்லே. அதுக்குள்ளே எங்கேயிருக்குன்னு கூடத் தெரியாத இந்த மனசைப்பத்தி நாம் என்ன அறியப் போறோம்!