பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 * லா. ச. ராமாமிருதம் அடுக்கும்? பிராமணப் பிள்ளையாய்ப் பிறந்துவிட்டு இந்த மாதிரி பண்ணிப்பிட்டு, கோவிலில் மணியாட்ட வந்துவிட்டால், ஊர் உருப்பட்டுவிடுமா?” அவளுக்கு உடல் பரபரத்தது. "இன்னிக்கு எனக்காச்சு, அவனுக்காச்சு. நான் கவனிச்சுக்கறேன். நானே உங்களுக்குச் சொல்கிறேன். அவனைக் கோவிலில் சேர்க்காதீர்கள். இன்றை யிலிருந்து பூஜைக்கு வேறு ஏற்பாடு பண்ணிக்கொள்ளுங்கள்: அவன் வீட்டுக்கு வருகையில் அவள் பூஜையில் உட்கார்ந் திருந்தாள். கட்டுக்கட்டாய் விபூதியணிந்து, துல்லியமான வெண்மையுடுத்தி, சிவப்பழமாய் மனையில் உட்கார்ந் திருந்தாள். எதிரே, கோலத்தின் மேல் பூஜை சம்புடம் இருந்தது. "அடே! இங்கே வா-” அவள் குரல் அவளுக்கே கணிரென்றது. அவன் மெளனமாய் வந்து நின்றான். புருவங்கள் வினாவில் நெரிந்தன. இடமே இருவரின் அந்தர பலத்தின் வேகத்தில் சிலிர்த்தது. இரு குஸ்திக்காரர்கள், தாக்குவதற்குமுன் ஒருவர் பலத்தையொருவர் வெறும் கண்ணோட்டத்திலேயே ஆராய்வதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். “இப்போ நான் பூஜையில் உட்கார்ந்திண்டிருக்கேன். அதனாலே என் வாயால் சொல்லக்கூட அஞ்சறேன். ஆனால் இன்னிக்கு உன்னைப்பத்தி நான் கேள்விப்பட்டது வாஸ்தவமா? அவன் முகம் சஞ்சலிக்கவில்லை; சிந்தனையில் ஆழ்ந்தது. அவனுடைய மெளனத்தால்தான் குழப்பம் உண்டாகியது. தன் மகனாயிருப்பினும் அவனை அறிய முடியாதது அவளுக்குப் பெருந்தோல்வியாயும் ஆத்திரமாயுமிருந்தது. “நான் எதைக் குறிச்சுக் கேக்கறேன்னு புரியறதா?”