பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புற்று ళ 77 புன்னகை புரிந்தான். “புரியாமல் என்ன?” “என்ன சொல்றே?" "உனக்கு என்ன தோன்றுகிறது? இப்பொழுது அவன் தான் பூனை, அவள்தான் எலியாக அவன் திடீரென்று மாற்றியதும், அவள் தன்னை அடக்கிக்கொள்ள செய்யும் முயற்சிகள் எல்லாம் பறந்தன. "அடே, இந்தச் சங்குப்பாலைக் கையிலே வெச்சுண்டு சொல்றேன்- நீ அழிஞ்சு போயிடுவே- என் வயிறு எரியக் காணாதே-” அவன் குரலும் பதிலும் அமைதியாய்த்தானிருந்தன“மற்றவர்கள் என்னை அழிக்கறதைவிட நானா அழிஞ்சு போறது மேல் இல்லையா? அதுவே ஒரு வைராக்கியந்தான், அம்மா- அதற்கு ஒரு சத்தியமுண்டு-” அம்மாவுக்கு உச்சி மண்டை இரத்தத்தில் முத்துக் கொதிகள் வந்தன. தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்தினாள்: - "அழிஞ்சேதான் போயிடுவே. நான்தான் சொல்றேனே.” “இப்போ என்னம்மா வந்துடுத்து? அழிஞ்சால்தான் இப்போ என்ன முழுகிப்போயிடுத்து? ஏன் இப்படி பிரமாதப்" “ஹா, பாவி! எண்ண பற்றே?-” அவள் கண்கள் பயங்கரத்தில் அகல விரிந்துவிட்டன. அவள் அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அவள் கண்கள் அவன் கையைத்தான் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. அப்பொழுதுதான் அவனுக்கு என்ன செய்தோம் எனத் தெரிந்தது. பேசிக் கொண்டே பூஜை விளக்கில் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டிருந்தான். அவள் தன் வசமிழந்துவிட்டாள். அவள் எதிரில் திடீரென்று திரை கிழிந்து, அவளுக்கு மாத்திரம் தரிசனம்