பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 * லா. ச. ராமாமிருதம் ஆவதுபோல், முகம் மாறியது. கன்னத்தில் பளிர் பளிர் என்று அறைந்துகொண்டாள். கண்கள் அமானுஷ்யமான ஒளியுடன் ஜொலித்தன. 'ஹே சுப்பிரமணியா! என்னை மன்னிச்சுடு- நான் இவனைப் பெத்தேயிருக்கப்படாது! என்னத்தைப் பெத்தேன்னு இப்பொழுதுதான் கண்டேன்! நான் பெரும் பாவத்தைப் பண்ணிட்டேன்- என்னை மன்னிச்சுக்கோ. மன்னிச்சுக்கோ-” 'தடாலென்று அவள் கீழே விழுந்துவிட்டாள். அவன் சிரித்துக்கொண்டே புகையை ஊதிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான். வீடு திரும்பும் வேளைக்கு அஸ்தமித்துவிட்டது. அவன் வீடே ஊருக்குக் கொஞ்சம் ஒதுக்கு மேட்டு நிலத்தில் இருந்தது. அதில் சாயந்தரம் திண்ணைப் புரையில் ஏற்றி வைக்கும் அகல் விளக்குச் சுடர் தொலைவிலேயே தெரியும். ஆனால் இன்று விளக்கு எரியவில்லை. அதுவே ஒரு ஆச்சரியமாய்த்தா னிருந்தது. கிட்ட நெருங்க நெருங்க வீட்டின் தேக்க மெளனம் வாய்விட்டு அலறியது. வெறுமெனச் சாத்தியிருந்த வாசற்கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றதும் இருட்டில் ஏதோ கனமாய் அவன் மேல் உராய்ந்து ஆடியது. காலின் கீழ் ஏதோ தடுக்கியது. பிடரி குறுகுறுத்தது. சட்டென நெருப்புக்குச்சியைக் கிழித்தான்அம்மா ரேழி விட்டத்திலிருந்து கயிற்றில் தொங்கிக்கொண் டிருந்தாள். காலடியில் ஒரு பித்தளை அடுக்கு உருண்டோடி யிருந்தது. அப்பொழுதாவது கலங்கியதோ மனம் என அவனையு மறியாமல் தன்னை ஆராய்கையில், அதில் ஏதோ ஓர் எண்ணம் லேசாய் மின்வெட்டுப்போல் பாய்ந்து மறைந்தது.